முகப்பு
தினந்தோறும் திருப்புகழ்

பகுதி - 754

பிறவித் துன்பம் அறவேண்டும்

Updated On : 10 பிப்ரவரி, 2018 at 11:21 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 5:43 PM

பிறவித் துன்பம் அறவேண்டும் என்று கோரும் இப்பாடல் ஆய்க்குடிக்கானது.  கொங்கு நாட்டிலும் ஒரு ஆய்க்குடி இருந்தாலும் இப்பாடலில் குறிக்கப்படும் தலம் தென்காசிக்கு அருகே உள்ளது.

அடிக்கு ஒற்றொழித்து 25 எழுத்துகளைக் கொண்ட பாடல்.  ஒன்று, மூன்று, ஐந்து ஆகிய சீர்களில் ஒரு நெடில், இரண்டு குறில், இரண்டு (கணக்கில் சேராத) வல்லொற்றுகளும்; இரண்டு, நான்கு, ஆறு ஆகிய சீர்களில் ஒரு நெடிலோடு தொடங்கும் நான்கெழுத்துகளும் அமைந்துள்ளன.


தாத்தனத் தானதன தாத்தனத் தானதன
                தாத்தனத் தானதன தனதான

Advertisement

வாட்படச் சேனைபட வோட்டியொட் டாரையிறு
                        மாப்புடைத் தாளரசர் பெருவாழ்வும்

மாத்திரை போதிலிடு காட்டினிற் போமெனஇல்
                        வாழ்க்கைவிட் டேறுமடி யவர்போலக்

கோட்படப் பாதமலர் பார்த்திளைப் பாறவினை
                        கோத்தமெய்க் கோலமுடன் வெகுரூபக்

கோப்புடைத் தாகியல மாப்பினிற் பாரிவரு
                        கூத்தினைப் பூரையிட அமையாதோ

தாட்படக் கோபவிஷ பாப்பினிற் பாலன்மிசை
                        சாய்த்தொடுப் பாரவுநிள் கழல்தாவிச்

சாற்றுமக் கோரவுரு கூற்றுதைத் தார்மவுலி
                        தாழ்க்கவஜ் ராயுதனு மிமையோரும்

ஆட்படச் சாமபர மேட்டியைக் காவலிடு
                        மாய்க்குடி காவலவு ததிமீதே

ஆர்க்குமத் தானவரை வேற்கரத் தால்வரையை
                        ஆர்ப்பெழச் சாடவல பெருமாளே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.