முகப்பு
தினந்தோறும் திருப்புகழ்

பகுதி - 762

தியானிப்பதை அருளவேண்டும்

Updated On : 20 பிப்ரவரி, 2018 at 3:32 PM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 5:48 PM

‘உன்னை எப்போதும் தியானிப்பதை அருளவேண்டும்’ என்று கோரும் இப்பாடல் திருவாலங்காட்டுக்கானது.  காரைக்காலம்மையாரின் பாடல் பெற்ற இத்தலம் சென்னைக்கு மேற்கே சுமார் 60 கிலோமீட்டர் தொலைவிலுள்ளது.

அடிக்கு ஒற்றொழித்து 34 எழுத்துகளைக் கொண்ட பாடல்.  ஒன்று, நான்கு, ஏழு ஆகிய சீர்களில் மூன்று குற்றெழுத்துகளும் ஒரு நெடிலும் ஒரு (கணக்கில் சேராத) மெல்லொற்றும்; இரண்டு, ஐந்து, எட்டு ஆகிய சீர்களிலும் மூன்று, ஆறு, ஒன்பது ஆகிய சீர்களிலும் ஒரு நெடிலும் இரண்டு குறிலுமாக மூன்றெழுத்துகளும் அமைந்துள்ளன.


தனதானந் தானன தானன
                தனதானந் தானன தானன
                தனதானந் தானன தானன தனதான

Advertisement

கனவாலங் கூர்விழி மாதர்கள்
               மனசாலஞ் சால்பழி காரிகள்
               கனபோகம் போருக மாமிணை முலைமீதே

கசிவாருங் கீறுகி ளாலுறு
               வசைகாணுங் காளிம வீணிகள்
               களிகூறும் பேயமு தூணிடு கசுமாலர்

மனவேலங் கீலக லாவிகள்
               மயமாயங் கீதவி நோதிகள்
               மருளாருங் காதலர் மேல்விழு மகளீர்வில்

மதிமாடம் வானிகழ் வார்மிசை
              மகிழ்கூரும் பாழ்மன மாமுன
              மலர்பேணுந் தாளுன வேயரு ளருளாயோ

தனதானந் தானன தானன
             எனவேதங் கூறுசொல் மீறளி
             ததைசேர்தண் பூமண மாலிகை யணிமார்பா

தகரேறங் காரச மேவிய
            குகவீரம் பாகும ராமிகு
            தகைசாலன் பாரடி யார்மகிழ் பெருவாழ்வே

தினமாமன் பாபுன மேவிய
           தனிமானின் தோளுட னாடிய
           தினைமாவின் பாவுயர் தேவர்கள் தலைவாமா

திகழ்வேடங் காளியொ டாடிய
           ஜெகதீசங் கேசந டேசுரர்
           திருவாலங் காடினில் வீறிய பெருமாளே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.