பகுதி - 879
இரவு பகல் பல காலும்..
பதச் சேதம் | சொற் பொருள் |
இரவு பகல் பல காலும் Advertisement | |
இயல் இசை தமிழ் கூறி
| |
திரம் அதனை தெளிவு ஆக | திரம் அதனை: நிலைத்திருப்பதை; |
திரு அருளை தருவாயே
|
|
பரம கருணை பெரு வாழ்வே |
|
பர சிவ தத்துவ ஞானா
|
|
அரன் அருள் சற் புதல்வோனே |
|
அருண கிரி பெருமாளே.
|
|
இரவுபகற் பலகாலும் இயலிசைமுத்தமிழ்கூறி... இரவு பகல் இரண்டு வேளைகளிலும் பற்பல முறை இயல், இசை நாடகம் என்ற மூன்ற தமிழாலும் உன்னைப் போற்றிப் பாடுவதால்,
திரமதனைத் தெளிவாகத் திருவருளைத் தருவாயே... எது நிலையான பொருளோ அதை நான் தெளிவாக உணரும்படி உன்னுடைய திருவருளைத் தந்தருள வேண்டும்.
பரகருணைப் பெருவாழ்வே... மேலான கருணையோடு விளங்குகின்ற பெருவாழ்வே!
பரசிவதத்துவஞானா... உயர்ந்த சிவமயமானதும் உண்மையானதுமான ஞானப் பொருளே!
அரனருள்சற் புதல்வோனே... சிவபெருமான் அருளிய நன் மகனே!
அருணகிரிப் பெருமாளே.... திருவண்ணாமலையில் வீற்றிருக்கும் பெருமாளே.
சுருக்க உரை
மேலான கருணையோடு விளங்குகின்ற பெருவாழ்வே! உயர்ந்த சிவமயமானதும் உண்மையானதுமான ஞானப் பொருளே! சிவபெருமான் அருளிய நன்மகனே! திருவண்ணாமலையில் வீற்றிருக்கின்ற பெருமாளே!
இரவு பகல் இரண்டு வேளையும் அடியேன் உன்னை இயல், இசை, நாடகம் ஆகிய முத்தமிழால் போற்றிப் பரவவேண்டும். நீ எனக்கு நிலையான பொருள் எதுவோ அதை உணர்வதற்கான தெளிவைத் தந்தருள வேண்டும்.