முகப்பு
தினந்தோறும் திருப்புகழ்

பகுதி - 780

யம தண்டனை என்னும்

Updated On : 14 மார்ச், 2018 at 12:00 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 5:58 PM

‘யம தண்டனை என்னும் துன்பத்தை ஒழித்தருள்க’ என்று கோரும் இப்பாடல் திரிசிராப்பள்ளிக்கானது.

அடிக்கு ஒற்றொழித்து 42 எழுத்துகளைக் கொண்ட பாடல்.  எல்லாச் சீர்களிலும் மூன்று குற்றெழுத்துகளும் ஒரு வல்லொற்றும் திரும்பத் திரும்பப் பயில்கின்றன.

தனனத் தனனத் தனனத் தனனத்

Advertisement

         தனனத் தனனத் தனனத் தனனத்

         தனனத தனனத் தனனத் தனனத்          தனதான
 

புவனத் தொருபொற் றொடிசிற் றுதரக்

         கருவிற் பவமுற் றுவிதிப் படியிற்

         புணர்துக் கசுகப் பயில்வுற் றுமரித்      திடிலாவி

         புரியட் டகமிட் டதுகட் டியிறுக்

         கடிகுத் தெனஅச் சம்விளைத் தலறப்

         புரள்வித் துவருத் திமணற் சொரிவித்   தனலூடே

 

தவனப் படவிட் டுயிர்செக் கிலரைத்

         தணிபற் களுதிர்த் தெரிசெப் புருவைத்

         தழுவப் பணிமுட் களில்கட் டியிசித்     திடவாய்கண்

         சலனப் படஎற் றியிறைச் சியறுத்

         தயில்வித் துமுரித் துநெரித் துளையத்

         தளையிட் டுவருத் தும்யமப் ரகரத்      துயர்தீராய் 

 

பவனத் தையொடுக் குமனக் கவலைப்

         ப்ரமையற் றைவகைப் புலனிற் கடிதிற்

         படரிச் சையொழித் ததவச் சரியைக்     க்ரியையோகர்

         பரிபக் குவர்நிட் டைநிவிர்த் தியினிற்

         பரிசுத் தர்விரத் தர்கருத் ததனிற்

         பரவப் படிசெய்ப் பதியிற் பரமக்         குருநாதா

 

சிவனுத் தமனித் தவுருத் திரன்முக்

         கணனக் கன்மழுக் கரனுக் ரரணத்

         த்ரிபுரத் தையெரித் தருள்சிற் குணனிற்  குணனாதி

         செகவித் தனிசப் பொருள்சிற் பரனற்

         புதனொப் பிலியுற் பவபத் மதடத்

         த்ரிசிரப் புரவெற் புறைசற் குமரப்        பெருமாளே.

 

 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.