பகுதி - 788
அடியேனின் பிறவிநோய் அழியவேண்டும்
‘அடியேனின் பிறவிநோய் அழியவேண்டும்’ என்று கோரும் இப்பாடல் திருவண்ணாமலைக்கானது.
அடிக்கு ஒற்றொழித்து 25 எழுத்துகளைக் கொண்ட பாடல். ஒன்று, மூன்று, ஐந்து ஆகிய சீர்களில் மூன்று குற்றெழுத்துகளும் ஒரு நெட்டெழுத்தும் என நான்கெழுத்துகளும்; இரண்டு, நான்கு, ஆறு ஆகிய சீர்களில் ஒரு நெடில், இரண்டு குறில், ஒரு (கணக்கில் சேராத) வல்லொற்று என மூன்றெழுத்துகளும் அமைந்துள்ளன.
தனதனா தானனத் தனதனா தானனத்
Advertisement
தனதனா தானனத் தனதான
அழுதுமா வாவெனத் தொழுதுமூ டூடுநெக்
கவசமா யாதரக் கடலூடுற்
றமைவில்கோ லாகலச் சமயமா பாதகர்க்
கறியொணா மோனமுத் திரைநாடிப்
பிழைபடா ஞானமெய்ப் பொருள்பெறா தேவினைப்
பெரியஆ தேசபுற் புதமாய
பிறவிவா ராகரச் சுழியிலே போய்விழப்
பெறுவதோ நானினிப் புகல்வாயே
பழையபா கீரதிப் படுகைமேல் வாழ்வெனப்
படியுமா றாயினத் தனசாரம்
பருகுமா றானனச் சிறுவசோ ணாசலப்
பரமமா யூரவித் தகவேளே
பொழுதுசூழ் போதுவெற் பிடிபடா பார்முதற்
பொடிபடா வோடமுத் தெறிமீனப்
புணரிகோ கோவெனச் சுருதிகோ கோவெனப்
பொருதவே லாயுதப் பெருமாளே.