முகப்பு
தினந்தோறும் திருப்புகழ்

பகுதி - 790

உனது திருவடிகளைத் தந்தருளவேண்டும்

Updated On : 24 மார்ச், 2018 at 4:31 PM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 6:03 PM

‘உனது திருவடிகளைத் தந்தருளவேண்டும்’ என்று கோரும் இப்பாடல் திருவண்ணாமலைக்கானது.

அடிக்கு ஒற்றொழித்து 28 எழுத்துகளைக் கொண்ட பாடல்.  ஒன்று முதல் ஆறு வரையுள்ள எல்லாச் சீர்களும் ஒரு நெடில், மூன்று குறில், ஒரு (கணக்கில் சேராத) வல்லொற்று என நான்கு-நான்கு எழுத்துகளைக் கொண்டவை.

தானதனத் தானதனத் தானதனத் தானதனத்

Advertisement

      தானதனத் தானதனத்               தனதானா

ஆனைவரிக் கோடிளநிர்ப் பாரமுலைச் சாரசைபட்

         டாடைமறைத் தாடுமலர்க்        குழலார்கள்

      ஆரவடத் தோடலையப் பேசிநகைத் தாசைபொருட்

         டாரையுமெத்  தாகமயக்          கிடுமோகர்

சோனைமழைப் பாரவிழித் தோகைமயிற் சாதியர்கைத்

         தூதுவிடத் தேபொருளைப்        பறிமாதர்

      தோதகமுற் றேழ்நரகிற் சேருமழற் காயனையுட்

         சோதியொளிப் பாதமளித்         தருள்வாயே

தானதனத் தீதிமிலைப் பேரிகைகொட் டாசமலைச்

         சாயகடற் சூரைவதைத்           திடுவோனே

      தாளவியற் சோதிநிறக் காலினெழக் கோலியெடுத்

         தாபரம்வைத் தாடுபவர்க்         கொருசேயே

தேனிரசக் கோவையிதழ்ப் பூவைகுறப் பாவைதனத்

         தேயுருகிச் சேருமணிக்           கதிர்வேலா

      சீரருணைக் கோபுரமுற் றானபுனத் தோகையுமெய்த்

         தேவமகட் கோர்கருணைப்        பெருமாளே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.