‘ஆசை அறவேண்டும்’ என்று கோரும் இப்பாடல் பழநிக்கானது.
அடிக்கு ஒற்றொழித்து 36 எழுத்துகளைக் கொண்ட பாடல். ஒன்று, இரண்டு, ஆறு, ஏழு ஆகிய சீர்களில் ஐந்து குற்றெழுத்துகளும்; மூன்று, நான்கு, எட்டு, ஒன்பது ஆகிய சீர்களில் ஒரு நெடிலும் ஒரு குறிலும், ஒரு (கணக்கில் சேராத) வல்லொற்றுமாக இரண்டெழுத்துகளும் அமைந்துள்ளன.
தனதனன தனதனன தானத் தானத் தனதானா
ஒருபொழுது மிருசரண நேசத் தேவைத் துணரேனே
உனதுபழ நிமலையெனு மூரைச் சேவித் தறியேனே
பெருபுவியி லுயர்வரிய வாழ்வைத் தீரக் குறியேனே
பிறவியற நினைகுவனெ னாசைப் பாடைத் தவிரேனோ
துரிதமிடு நிருதர்புர சூறைக் காரப் பெருமாளே
தொழுதுவழி படுமடியர் காவற் காரப் பெருமாளே
விருதுகவி விதரணவி நோதக் காரப் பெருமாளே
விறன்மறவர் சிறுமிதிரு வேளைக் காரப் பெருமாளே.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.