‘உனது திருவடிகளைத் தந்தருள வேண்டும்’ என்று கோரும் இப்பாடல் சுவாமிமலைக்கானது.
அடிக்கு ஒற்றொழித்து 24 எழுத்துகளைக் கொண்ட பாடல். ஒன்று, இரண்டு, நான்கு, ஐந்து ஆகிய சீர்களில் நான்கு நான்கு குற்றெழுத்துகளும்; மூன்று, ஆறு ஆகிய தொங்கல் சீர்களில் இரண்டு குற்றெழுத்தும் இரண்டு நெடிலுமாய் நான்கெழுத்துகளும் அமைந்துள்ளன.
தனதன தனதன தனதான
நிறைமதி முகமெனு மொளியாலே
நெறிவிழி கணையெனு நிகராலே
உறவுகொள் மடவர்க ளுறவாமோ
உனதிரு வடியினி யருள்வாயே
மறைபயி லரிதிரு மருகோனே
மருவல ரசுரர்கள் குலகாலா
குறமகள் தனைமண மருள்வோனே
குருமலை மருவிய பெருமாளே
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.