இந்த நாளில் அன்று - (13.08.1953) - ஹிருதயங்களின் இணைப்பு - பூதான இயக்கம் பற்றி வினோபா பாவே
ஹிருதயங்களை ஒன்றுபடுத்துவதுதான் சர்வோதயத்தின் லட்சியம் என்றும், பூமிதான இயக்கத்தில் இது தவிர்க்க முடியாத அம்சம் என்றும் ஆசாரிய வினோபா பாவே கூறினார்.
ஹிருதயங்களை ஒன்றுபடுத்துவதுதான் சர்வோதயத்தின் லட்சியம் என்றும், பூமிதான இயக்கத்தில் இது தவிர்க்க முடியாத அம்சம் என்றும் ஆசாரிய வினோபா பாவே கூறினார்.
இதர துறைகளில் ஒருவரோடு ஒருவர் சண்டை போட்டுக்கொண்டிருக்கும் அரசியல் கட்சிகள் இந்த விஷயத்தில் ஒரே மேடையில் சேர்ந்து வேலை செய்கின்றன. சிறு மனிதர்கள் கூட இதற்கு தம்மால் இயன்ற உதவியைச் செய்வதே இதன் வெற்றிக்கு அறிகுறியாகும்.
நம்மிடம் இருப்பது நம்முடையதல்ல; அது எல்லோருக்கும் சொந்தம் என்பதே சர்வோதயம். நமக்குத் தேவையானதை வைத்துக்கொண்டு சமூகத்துக்குரிய பங்கை திருப்பிக் கொடுத்து விட வேண்டும் என்றார் வினோபா பாவே.
Advertisement