முகப்பு
இந்த நாளில்...

இந்த நாளில் அன்று - (18.08.1958) - புதுடில்லி நகரத்தில் ஜல சப்ளை நின்றுவிட்டது - ஒரு டம்ளர் ஜலம் ஒரு அணா; ஒரு கப் காபி 45 நயா பைசா

புதுடில்லி நகரத்தில் உள்ள 16 லட்சம் ஜனங்கள் தண்ணீர் கிடைக்காமல் திண்டாடுகிறார்கள். ஜல சப்ளை ஸ்டேஷனில் ஏற்பட்ட கோளாறினால் குழாய்களில் தண்ணீர் வரவில்லை.

Updated On : 6 ஆகஸ்ட், 2025 at 12:07 PM
பகிர்:

புதுடில்லி நகரத்தில் உள்ள 16 லட்சம் ஜனங்கள் தண்ணீர் கிடைக்காமல் திண்டாடுகிறார்கள். ஜல சப்ளை ஸ்டேஷனில் ஏற்பட்ட கோளாறினால் குழாய்களில் தண்ணீர் வரவில்லை.

3500 தொழிலாளர்களும், 200 ராணுவத்தினரும் யமுனை நதியில் இருந்து தண்ணீர் இறைவை ஸ்டேஷனுக்கு கால்வாய் வெட்டிக்கொண்டிருக்கிறார்கள்.

ஒரு டம்ளர் ஜலம் ஒரு அணாவுக்கு விற்கப்பட்டது. ஒரு கப் காபி 45 நயா பைஸா. சோடா, கலர் பானங்களுக்கு ஏராளமாகச் செலவாகின. மாலையில் சில இடங்களில் மூன்று மணி நேரத்துக்கு ஜலம் வந்தது.

Advertisement

இது தொடர்பாக, லோக சபையில் ஒரு அவசரத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. சர்க்காரின் அஜாக்கிரதையை எதிர்க்கட்சிகள் பலமாகக் கண்டித்தன. கடைசியில், தீர்மானம் பெருவாரியான வாக்குகளால் நிராகரிக்கப்பட்டது.

*

வெள்ளத்துக்குப் பிறகு யமுனை நதியின் திசை மாறியதால் குழாய்களில் தண்ணீர் வரவில்லை. தலைநகரில் ஏற்பட்டுள்ள தண்ணீர்த் தட்டுப்பாடு லோக சபை அங்கத்தினர்களையும் பாதித்துவிட்டது. அவர்கள் தங்கள் இடங்களில் வழக்கமாகக் காட்சியளிக்கும் மூடிய கண்ணாடி டம்ளர்களை காணாமல் திடுக்கிட்டனர். சோடா, கலர் சாப்பிடுங்கள் அல்லது சூடான காப்பி குடியுங்கள் என்று எம்.பி.க்களிடன் லோக சபை சிப்பந்திகள் கூறினர்.

தண்ணீர் பிரச்னை காரணமாக, டில்லியில் உள்ள பள்ளிகளில் பெரும்பாலானவை மூடப்பட்டன. நகரின் பல பகுதிகளில் குளிர்பானங்களும் கிடைக்கவில்லை.

காலை நான்கு மணிக்கு தண்ணீர் கிடைக்கும் என்று நீர்த்தேக்க அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால், 4 மணி கடந்து பல மணி நேரமாகியும் ஒரு சொட்டு தண்ணீர்கூட கிடைக்கவில்லை. காலை 9 மணிக்கு கொஞ்சம் தண்ணீர் கிடைக்கும் என்று அதிகாரிகள் வாக்களித்தனர். ஆனால், பகலுக்குப் பின்புகூட தலைநகர மக்கள் தண்ணீருக்காக நகரில் உள்ள ஒரு சில கிணறுகளை நோக்கி ஓடிக் கொண்டிருக்கின்றனர்.

தண்ணீர் இல்லாமல் என்னதான் நடக்கும்!?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments