முகப்பு
இந்த நாளில்...

இந்த நாளில் அன்று - (22.08.1963) - தரும காரியங்களுக்காக என்னைப் புகழ வேண்டாம் - மக்களுக்கும் பத்திரிகைகளுக்கும் காஞ்சி ஸ்ரீ ஆச்சார்யாள் உருக்கம்

தம்மையும் தமது சேவைகளையும் புகழ வேண்டாம் என்று காஞ்சி காமகோடி பீட ஸ்ரீ ஆச்சார்யாள், பொது மக்களையும் பத்திரிகைகளையும் உருக்கமாகக் கேட்டுக்கொண்டார்.

Updated On : 6 ஆகஸ்ட், 2025 at 12:07 PM
பகிர்:

தம்மையும் தமது சேவைகளையும் புகழ வேண்டாம் என்று காஞ்சி காமகோடி பீட ஸ்ரீ ஆச்சார்யாள், பொது மக்களையும் பத்திரிகைகளையும் உருக்கமாகக் கேட்டுக்கொண்டார்.

பொது மக்களும், பத்திரிகைகளும் உற்சாகத்தில் அதிகப்படியாகத் தம்மைப் புகழ்வதால் இடைஞ்சல்களும் மனக் கஷ்டங்களும் ஏற்படுவதாகக் குறிப்பிட்டார்.

என் மீதுள்ள பக்தியினால் என்னை புகழ்ந்தாலும், அதிகப்படியாகப் புகழ்வது எனக்கு சங்கடத்தையும் சிரமத்தையும் தருகிறது. சில சமயங்களில் ஹிந்து தர்மத்துக்கு பெரும் சேவை புரிகிற மற்றவர்களை குறைத்து என்னை புகழ்வது எனக்கு வேதனையும் வருத்தமும் தருகிறது.

Advertisement

இப்படியெல்லாம் செய்தால், ஹிந்து தர்மத்துக்காக பணியாற்றுவது பாதிக்கப்படும். எத்தனையோ பெரியவர்கள், மகான்கள் ஹிந்து தர்மத்தைப் பரப்ப அரும் பெரும் பணியாற்றி வருகிறார்கள்.

நமது தர்மத்தைப் பரப்ப இன்னும் எவ்வளவோ பெரு முயற்சிகள் செய்யவேண்டி இருக்கையில், பத்திரிகைகளும் பொது மக்களும் ஆக்க முறையில் நடந்துகொள்வது அவசியம். ஆகவே, என்னைப் புகழாமல் இருப்பதே எனக்குச் செய்யும் பெரும் உதவியாகும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments