இந்த நாளில் அன்று - (24.08.1965) - இந்தியா இப்போதைக்கு அணு ஆயுதங்கள் தயாரிக்காது - பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி தகவல்
இந்தியா இப்போதைக்கு அணு ஆயுதங்கள் எதுவும் தயாரிக்காது என்று ராஜ்ய சபையில் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி தெரிவித்தார்.
இந்தியா இப்போதைக்கு அணு ஆயுதங்கள் எதுவும் தயாரிக்காது என்று ராஜ்ய சபையில் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி தெரிவித்தார்.
ராஜஸ்தானில் ஒரு அணு ஆலை நிறுவ கனடா நாட்டு அரசுடன் பேச்சு நடத்தி வரும் இந்தியா, அந்த அணு உலையில் இருந்து கிடைக்கும் உப பொருள்களை உபயோகிப்பதில் நிபந்தனை ஏதும் கூடாது என்று வற்புறுத்துமா என்று ஒரு உறுப்பினர் கேட்டார்.
அந்த உப பொருள்களை அணுகுண்டு தயாரிக்க நாம் உபயோகிக்க வேண்டியிருக்கலாம் என்று சாஸ்திரி பதிலளித்தார்.
Advertisement
ஆனால், இப்போதைக்கு அணு ஆயுதங்கள் தயாரிப்பது நமது கொள்கையல்ல. உப பொருள்களை உபயோகிக்கும் விஷயம் பற்றி கனடா சர்க்காருடன் பேச்சு நடந்துவருவதாக அவர் தெரிவித்தார்.