இந்த நாளில் அன்று (26.08.1967)ஒற்றுமையைவிட வேற்றுமை அதிகமாக வலியுறுத்தப்படுகிறது - உபராஷ்டிரபதி வி.வி.கிரி வேதனை
நாட்டில் இப்போது ஒற்றுமையைவிட வேற்றுமை அம்சம் அதிகமாக வலியுறுத்தப்படுவதாக உபராஷ்டிரபதி வி.வி.கிரி வருத்தத்துடன் கூறினார். தேசிய ஒருமைப்பாட்டின் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.
நாட்டில் இப்போது ஒற்றுமையைவிட வேற்றுமை அம்சம் அதிகமாக வலியுறுத்தப்படுவதாக உபராஷ்டிரபதி வி.வி.கிரி வருத்தத்துடன் கூறினார். தேசிய ஒருமைப்பாட்டின் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.
மொழிவாரி மாகாணங்கள் ஏற்பட்டால், அது வேற்றுமையைவிட இந்தியாவின் ஒற்றுமையை வலியுறுத்தும் என்று நினைத்தே சுதந்திர இயக்கத்தின்போது காந்திஜியும் காங்கிரஸ் தலைவர்களும் மொழிவாரி மாகாணங்களை ஆதரித்ததாக அவர் கூறினார்.
அப்படியே ஒவ்வொருவரும் நினைத்தனர். ஆனால், இன்றுள்ள நிலைமை என்ன? நதித் தண்ணீரைப் பகிர்ந்துகொள்வது சம்பந்தமாக நோட்டீஸ் கொடுக்கும் அளவுக்கு ஒரு மாநிலம் இன்னொரு மாநிலத்தை வெறுக்கிறது.
Advertisement
சிறுபான்மையோர் நியாயமாக நடத்தப்பட வேண்டும் என்று நம்முடைய அரசியல் சட்டம் உத்தரவாதம் அளித்துள்ளபோதிலும் பெரும்பான்மையினர், சிறுபான்மையினரை சரிவர நடத்துவதில்லை. மைனாரிட்டியினர் யாரோ புதிய மனிதர்களைப்போல நடத்தப்படுவதாகக் கூறினார்.
மொழிவாரி மாநிலங்கள், ஒற்றுமைச் சிதைவை உண்டுபண்ணியுள்ளது. நல்லகாலமாக பல்வேறு மாநிலங்களுக்கு ராணுவங்களை நமது அரசியலமைப்பு ஒதுக்கவில்லை. இல்லா விட்டால், பம்பாய் ராணுவம் மைசூரிலும், மைசூர் ராணுவம் பம்பாயிலும் இருக்கும்.
ஒவ்வொருவரும் நான் இந்தியன் என்பதை உணரச் செய்ய மக்கள் மனத்தில் ஒற்றுமை உணர்ச்சி ஏற்படுத்தப்பட வேண்டும் என்றார் வி.வி.கிரி.