இந்த நாளில் அன்று - (28.08.1970) - காவிரிப் பிரச்னை: 1924 உடன்பாடு குறித்து கருத்து வேறுபாடு உள்ளது - மைசூர் முதல்வர்
மைசூருக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையே 1924-ல் காவேரி தண்ணீர் குறித்து ஏற்பட்ட உடன்பாடு சம்பந்தமாக தாம் கருத்து வேறுபாடு கொண்டிருப்பதாக மைசூர் முதன்மந்திரி ஸ்ரீ வீரேந்திர பாட்டீல் ஊர்ஜிதம் செய்தார்.
மைசூருக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையே 1924-ல் காவேரி தண்ணீர் குறித்து ஏற்பட்ட உடன்பாடு சம்பந்தமாக தாம் கருத்து வேறுபாடு கொண்டிருப்பதாக மைசூர் முதன்மந்திரி ஸ்ரீ வீரேந்திர பாட்டீல் ஊர்ஜிதம் செய்தார்.
முதன்மந்திரிகளின் அடுத்த கூட்டம் 1924 உடன்பாடு அடிப்படையில் நடைபெறும் என்று தமிழக முதல்வர் கருணாநிதி கூறியிருப்பது பற்றி கேட்டதற்கு, இவ்வாறு எதுவும் கூறாமல் முன்பு இரண்டு அல்லது மூன்று கூட்டங்களில் தாம் கலந்துகொண்டிருப்பதாக அவர் கூறினார்.
இந்த உடன்பாடு குறித்து தமக்கு கருத்து வேறுபாடு உள்ளது என்பதை தமிழக, கேரள முதன் மந்திரிகளிடமும், யூனியன் பாசன மின்சார மந்திரியிடமும் தெரிவித்துள்ளதாக அவர் சொன்னார்.
Advertisement
1924-ம் வருட உடன்பாட்டின்படி தாம் நடந்துகொள்ளப் போவதாக தாம் கருத்து எதையும் கூறியதில்லை என்று அவர் ஊர்ஜிதம் செய்தார்.