இந்த நாளில் அன்று - (29.08.1971) - காவிரி பிரச்னை - தமிழக மக்களுக்கு மத்திய அரசு துரோகம் இழைத்துவிட்டது: கருணாநிதி
காவிரி பிரச்னை சம்பந்தமாக மத்திய அரசின் நிலையை முதலமைச்சர் கருணாநிதி கண்டித்தார். தமிழக மக்களுக்கு இந்திரா சர்க்கார் துரோகம் இழைத்துவிட்டதாக அவர் குற்றம் சாட்டினார்.
காவிரி பிரச்னை சம்பந்தமாக மத்திய அரசின் நிலையை முதலமைச்சர் கருணாநிதி கண்டித்தார். தமிழக மக்களுக்கு இந்திரா சர்க்கார் துரோகம் இழைத்துவிட்டதாக அவர் குற்றம் சாட்டினார்.
வீரேந்திர பாட்டீல், மைசூர் முதன் மந்திரியாக இருந்தபோது காவிரி தண்ணீர் பற்றிய 1924 உடன்பாட்டை மைசூர் மதிக்காது என்று தெரிவித்தார்.
மத்திய சர்க்காரின் கட்டளையை மீறி மைசூர் சர்க்கார் ஹேமாவதி மற்றும் இதர அணைக்கட்டுகளை மேற்கொண்டு நிர்மாணிக்க முற்பட்டது. ஆனால், தற்போது மைசூரில் ராஷ்டிரபதி ஆட்சி அமலில் உள்ளது. இது ராஜ்யத்தில் மத்திய ஆட்சி அமலில் இருப்பதாகவே பொருள்படும். மத்திய ஆட்சி தனது கட்டளையையே மீறுகிறது என்று கருணாநிதி மேலும் கூறினார்.
Advertisement
இதுதான் தேசிய ஒருமைப்பாடா என்றும், பிரிவினைவாதிகளாகுமாறு நம்மை கோருகிறார்களா என்றும் அவர் கேட்டார்.
காவிரி தண்ணீர் தகராறை டிரிபியூனல் ஒன்றின் தீர்ப்புக்கு விட்டிருக்க வேண்டும் என்று அவர் சொன்னார். சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நடத்துவதற்காக தலா ரூ.1 அளிக்குமாறு திருச்சி, தஞ்சை ஜில்லா விவசாயிகளுக்கு முதலமைச்சர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்தார்.