இந்த நாளில் அன்று (2.6.1991)ராஜீவ் கொலையுண்ட இடத்தில் சர்வமத பிரார்த்தனை
ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட இடத்தில் அவரது ஆத்மா சாந்தி அடைவதற்காக சர்வத மத பிரார்த்தனை நடைபெற்றது.
ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட இடத்தில் அவரது ஆத்மா சாந்தி அடைவதற்காக சர்வத மத பிரார்த்தனை நடைபெற்றது.
முன்னதாக, ராஜீவ் காந்திக்கு 13-வது நாள் ஈமக்கிரியைகள் நடைபெற்றன. படுகொலை செய்யப்பட்ட இடத்தில் நடுகல் ஒன்று நடப்பட்டு அதற்கு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
சர்வமத பிரார்த்தனையில், திவ்யப்பிரபந்த பாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. கிறிஸ்தவ, இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்தவர்களும் பிரார்த்தனையில் கலந்துகொண்டு பக்தி கீதங்களை இசைத்தனர்.
Advertisement
நடுகல்லுக்கு முன்பாக சௌந்திரா கைலாசம் அகல் விளக்குகளை ஏற்றிவைத்து பிரார்த்தனையைத் தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து வேத கோஷங்கள் முழங்க சாந்தி ஹோமம் நடத்தப்பட்டது.
சர்வமத பிரார்த்தனையைத் தொடர்ந்து 5000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.