முகப்பு
இந்த நாளில்...

இந்த நாளில் அன்று (03.06.1992)இந்தியாவிடம் 'அக்னி' ஏவுகணை : பாகிஸ்தான் கவலை

அக்னி ஏவுகணையை இந்தியா உருவாக்கியுள்ளது குறித்து பாகிஸ்தான் கவலை தெரிவித்துள்ளது. இந்தப் பிராந்தியத்தில் அமைதி, பாதுகாப்புச் சூழ்நிலை மேம்பட இது உதவாது என்று, அதன் வெளியுறவுச் செயலர் சஹர்யார் கான் கூறினார்.

Updated On : 6 ஆகஸ்ட், 2025 at 12:06 PM
பகிர்:

அக்னி ஏவுகணையை இந்தியா உருவாக்கியுள்ளது குறித்து பாகிஸ்தான் கவலை தெரிவித்துள்ளது. இந்தப் பிராந்தியத்தில் அமைதி, பாதுகாப்புச் சூழ்நிலை மேம்பட இது உதவாது என்று, அதன் வெளியுறவுச் செயலர் சஹர்யார் கான் கூறினார்.

அக்னி ஏவுகணை 2500 கி.மீ. தூரம் பாய்ந்து சென்று தாக்கும் திறன் பெற்றது. இது பாகிஸ்தானுக்கு மிகவும் கவலை அளிக்கும் விஷயமாகும். தளவாடங்களையும் தொழில் நுட்பங்களையும் பெற எந்த ஒரு நாட்டுக்கும் உரிமை உண்டு. ஆனால், அது அந்த நாட்டின் நியாயமான பாதுகாப்புத் தேவைகளுக்கு உகந்த வகையில் இருக்க வேண்டும் என்றார் அவர்.

உலகெங்கும் சமாதானம், ஆயுதக் குறைப்பு ஆகியவற்றில் தீவிர அக்கறை காட்டப்படுகிறது. இந்தப் போக்குக்கு எதிராக இந்தியா ஏவுகணைத் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது என்று அவர் கூறினார்.

Advertisement

தெற்காசியாவில் ஏவுகணை உற்பத்தி குறித்து இரு தரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்த வேண்டும் என்று பாகிஸ்தான் ஏற்கெனவே இந்தியாவுக்குக் கூறியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

அக்னி ஏவுகணை மூலம் ஏற்படக்கூடிய எதிர்மறை விளைவுகள் குறித்து உலக நாடுகள் உரிய கவனம் செலுத்தி, தக்க பரிகாரம் காணும் என நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments