இந்த நாளில் அன்று(08.03.1960)பத்மினிக்கு விமான நிலைய வாசம் - கெய்ரோவில் குவாரண்டைன் கட்டுப்பாடு
காலரா தடுப்பு ஊசி போட்டுக்கொண்டதற்குச் செல்லத்தக்க அத்தாட்சி வைத்திராததால், தென்னிந்திய திரைப்பட நட்சத்திரம் பத்மினிக்கு இன்று கெய்ரோவில் குவாரண்டைன் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.
இந்த நாளில் அன்று
(08.03.1960)
பத்மினிக்கு விமான நிலைய வாசம் - கெய்ரோவில் குவாரண்டைன் கட்டுப்பாடு
Advertisement
காலரா தடுப்பு ஊசி போட்டுக்கொண்டதற்குச் செல்லத்தக்க அத்தாட்சி வைத்திராததால், தென்னிந்திய திரைப்பட நட்சத்திரம் பத்மினிக்கு இன்று கெய்ரோவில் குவாரண்டைன் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.
எகிப்திய கலாசார இலாகாவின் அழைப்பின் பேரில் ஆப்பிரிக்கா - ஆசிய திரைப்பட விழாவில் கலந்துகொள்வதற்காக பத்மினி, கெய்ரோ போயிருப்பது நினைவிருக்கலாம். அவருடன் சகோதரி ராகினியும் அவரது தாயாரும் போயிருக்கிறார்கள்.
அவருக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடு மார்ச் 11-ம் தேதியன்று நீக்கப்படும். திரைப்பட இறுதி விழாவில் மார்ச் 12-ம் தேதி அவருடைய நாட்டிய நிகழ்ச்சி இருக்கிறது.
விமான நிலைய விருந்தாளி அறையில் பத்மினியுடன் அவர் தாயாரும், தங்கையும் துணை இருக்கின்றனர்.