இந்த நாளில் அன்று(19.03.1971)த.நா. பரிசுச் சீட்டு - தமிழ்ப் புத்தாண்டு சிறப்புப் பரிசுகள்
மகிழ்ச்சி பொங்கும் தமிழ்ப் புத்தாண்டு தினத்தினைக் குறிக்கும் வகையில், எச்.பி. முதல் எச்.கே. வரையில் உள்ள பத்து வரிசை சிறப்புப் பரிசுச் சீட்டுகள், மே மாத குலுக்கலுக்காக பொதுமக்களுக்கு வெளியிட தமிழக அரசு முடிவு செய்துள்ளது. 1971 மே மாதம் 6-ம் தேதி இச்சிறப்பு பரிசுச் சீட்டு குலுக்கல் நடைபெறும்.
இந்த நாளில் அன்று
(19.03.1971)
த.நா. பரிசுச் சீட்டு - தமிழ்ப் புத்தாண்டு சிறப்புப் பரிசுகள்
Advertisement
மகிழ்ச்சி பொங்கும் தமிழ்ப் புத்தாண்டு தினத்தினைக் குறிக்கும்வகையில், எச்.பி. முதல் எச்.கே. வரையில் உள்ள பத்து வரிசை சிறப்புப் பரிசுச் சீட்டுகள், மே மாத குலுக்கலுக்காக பொதுமக்களுக்கு வெளியிட தமிழக அரசு முடிவு செய்துள்ளது. 1971 மே மாதம் 6-ம் தேதி இச்சிறப்பு பரிசுச் சீட்டு குலுக்கல் நடைபெறும்.
பரிசுச் சீட்டின் விலை ரூபாய் ஒன்றுதான். வழக்கமாக ஒவ்வொரு வரிசைக்கும் வழங்கப்படும் பரிசான ரூ.3,50,000 தவிர, இதர சிறப்புப் பரிசுகள் வழங்கப்படும். ஒரு முதல் பரிசு ரூ.5 லட்சம், ஒரு இரண்டாம் பரிசு ரூ.3 லட்சம், ஒரு மூன்றாம் பரிசு ரூ.2 லட்சம், ஆக மொத்தம் ரூ.10 லட்சம். பத்து வரிசை சீட்டுகளுக்கும் சிறப்புப் பரிசுத் தொகை உள்பட மொத்தப் பரிசுத் தொகை ரூ.45 லட்சம் ஆகும்.
இந்தச் சிறப்புப் பரிசுத் தொகையில், 10 சதவீதம் ஏஜண்டுகளுக்கு போனசாக கொடுக்கப்படும். இரண்டு வரிசை பரிசுச் சீட்டுகள் முதலில் தமிழ்நாட்டில் உள்ள எல்லாத் துணைக் கருவூலங்களிலும் மார்ச் 26-ம் தேதியன்றே கிடைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பரிசுத் தொகையின் நிகர வருவாய் தமிழ்நாடு சிறப்புப் பொது நல நிதியில் சேர்க்கப்பட்டு, கீழ்க்கண்ட பணிகளுக்காகச் செலவிடப்படும்.
மருத்துவ வசதிகளை ஏற்படுத்துதல், விரிவுபடுத்துதல், தொடக்க பள்ளிக் கட்டடங்கள், குடிசைப் பகுதிகளைச் சீரமைக்கும் திட்டம், அரசு ஏற்பு அளித்துள்ள பிறிதொரு வளர்ச்சித் திட்டம்.