முகப்பு
இந்த நாளில்...

இந்த நாளில் அன்று(24.05.1982)கேரளத்தின் மிகப்பெரிய மந்திரி சபை - கருணாகரன் தலைமையில் பதவியேற்றது

கேரளத்தில் காங்கிரஸ் (இ) தலைவர் கே.கருணாகரன் தலைமையில் 19 பேர் கொண்ட கூட்டணி மந்திரி சபை பதவி ஏற்றது.

Updated On : 6 ஆகஸ்ட், 2025 at 12:06 PM
பகிர்:

கேரளத்தில் காங்கிரஸ் (இ) தலைவர் கே.கருணாகரன் தலைமையில் 19 பேர் கொண்ட கூட்டணி மந்திரி சபை பதவி ஏற்றது.

ராஜபவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கவர்னர் திருமதி ஜோதி வெங்கடாசலம், அமைச்சர்களுக்குப் பதவி பிரமாணம் செய்துவைத்தார்.

கருணாகரன் மந்திரி சபைதான் இதுவரை கேரளத்தில் ஏற்பட்ட மந்திரி சபைகளிலேயே பெரியதாகும். கடந்த 25 ஆண்டுகளில் பதவி ஏற்றுள்ள 13-வது மந்திரி சபையாகும்.

Advertisement

இதுவரை ஈ.கே.நாயனாரின் (இடது கம்யூ) மந்திரி சபைதான் பெரிதாக இருந்தது. அதில் 17 பேர் இருந்தார்கள்.

இப்போதைய மந்திரி சபை, கடந்த 5 ஆண்டுகளில் பதவி ஏற்றுள்ள ஏழாவது மந்திரி சபையாகும். மூன்றாவது தடவையாக, அதுவும் 5 ஆண்டு காலத்துக்குள் முதலமைச்சராகும் பெருமை கருணாகரனுக்கு உண்டு.

19 பேர் கொண்ட மந்திரி சபையில் 10 பேர் முதல் தடவையாக இடம் பெற்றுள்ளனர். மந்திரி சபையில் உள்ள ஒரே பெண் அமைச்சர் திருமதி கமலம். வயலார் ரவி, கர்த்தா, பத்மராஜன் முதல் தடவையாக அசெம்பிளிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments