இந்த நாளில் அன்று(26.05.1984)1985-86 கல்வி ஆண்டில் முதல் வகுப்பில் இருந்து தொழில் கல்வி - முதல்வர் எம்ஜிஆர் அறிவிப்பு
தமிழ்நாட்டில் சத்துணவுத் திட்டத்தின் கீழ் அடுத்த கல்வி ஆண்டில் (1985-86) இருந்து ஒவ்வொரு குழந்தைக்கும் வருடம் ஒன்றுக்கு 2 செட்டு பள்ளிச் சீருடைகள் வழங்கப்படும் என்று முதலமைச்சர் எம்.ஜி.ராமச்சந்திரன் அறிவித்தார்.

அடுத்த கல்வி ஆண்டில் இருந்து மாநிலத்தில் உள்ள எல்லா பள்ளிக்கூடங்களிலும் ஒன்றாவது வகுப்பு முதற்கொண்டே தொழில் கல்வி அறிமுகப்படுத்தப்படும் என்றும் எம்.ஜி.ராமச்சந்திரன் கூறினார்.
அடுத்த வருடம் துவங்கும் 7-வது திட்ட பணிகளின் துவக்கத்தில் இருந்தே மேற்கூறிய இரண்டு திட்டங்களும் சேர்க்கப்பட வேண்டும் என்று மத்திய அரசை தமிழ்நாடு அரசு கேட்டுக் கொண்டுள்ளது என்றும் தமிழ்நாடு முதல் அமைச்சர் கூறினார்.
Advertisement
உத்தேசிக்கப்பட்டுள்ள புதிய தொழில் கல்விமுறையை அமல்படுத்த, 8-வது நிதிக் கமிஷனின் ஒதுக்கீடு மூலம் உதவுமாறு மத்திய அரசை தமிழ்நாடு அரசு கேட்டுக்கொண்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.