இந்த நாளில் அன்று (29.05.1987)முன்னாள் பிரதமர் சரண்சிங் காலமானார் - அரசு சார்பில் 4 நாள் துக்கம்
லோகதள கட்சித் தலைவரும், முன்னாள் பிரதமருமான சரண் சிங் காலமானார். அன்னாருக்கு வயது 85. நீண்ட நாள்களாக அவர் உடல் நலமின்றி இருந்தார்.
லோகதள கட்சித் தலைவரும், முன்னாள் பிரதமருமான சரண் சிங் காலமானார். அன்னாருக்கு வயது 85. நீண்ட நாள்களாக அவர் உடல் நலமின்றி இருந்தார்.
சரண் சிங்கின் தகனக்கிரியை டெல்லியில் நடைபெறும். மறைந்த தலைவருக்கு மரியாதை தெரிவிக்கும் வகையில் நாடு முழுவதும் அரசு தரப்பில் 4 நாள் துக்கம் அனுஷ்டிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மாரடைப்பு காரணமாக மரணம் ஏற்பட்டதாக டாக்டர்கள் கூறினர். சரண் சிங் காலமானபோது அவரது மனைவி, மகன், மருமகன் ஆகியோர் அருகில் இருந்தனர்.
சரண் சிங்கின் சடலம் பொது மக்கள் பார்வைக்காக 48 மணி நேரம் வைக்கப்பட்டிருக்கும்.