இந்த நாளில் அன்று (31.05.1989)பிளஸ் டூ தேர்வு முடிவுகள் - இந்த ஆண்டும் மாணவிகள் தேர்ச்சி விகிதம் அதிகம்
பிளஸ் டூ தேர்வில் கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் மாணவர்களைவிட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
பிளஸ் டூ தேர்வில் கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் மாணவர்களைவிட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
எனினும், ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதம் இந்த ஆண்டு குறைந்துள்ளது. கடந்த ஆண்டில் தேர்ச்சி பெற்றவர்கள் 59.3 சதம். இந்த ஆண்டில் 58.7 சதம் பேர் வெற்றிபெற்றுள்ளனர்.
மாணவர்களில் 52.3 சதமும், மாணவிகளில் 66.5 சதமும் இந்த ஆண்டு தேர்ச்சி அடைந்துள்ளனர். இந்த ஆண்டில் 60 சத மதிப்பெண்களும், அதற்கு மேலும் பெற்றவர்களின் எண்ணிக்கை 64,039. இந்த எண்ணிக்கை, கடந்த ஆண்டைவிட 4000 அதிகம்.
ப்ளஸ் டூ தேர்வில் எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டில் இயற்பியல், வேதியியல் ஆகிய பாடங்களில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் மெற்றவர்களின் எண்ணிக்கை அதிகம். ஆனால், கணிதப் பாடத்தில் நூறு சத மதிப்பெண்கள் பெற்றவர்கள் எண்ணிக்கை கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டில் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. கணிதத்தில் கடந்த ஆண்டில் 1409 பேர் நூறு சத மதிப்பெண்கள் பெற்றனர். ஆனால் இந்த ஆண்டில் 212 பேர்தான் நூறு சத மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
நூறு சத மதிப்பெண்கள் பெற்றுள்ள மாணவ - மாணவியரின் விடைத்தாள் மறுசோதனைக்கு உட்படுத்தப்பட்டு அவர்கள் பெற்ற மதிப்பெண்கள் சரியானவைதானா என்று சரிபார்க்கப்பட்டது என்று பள்ளிக் கல்வி இயக்குநரும், அரசுத் தேர்வுகள் இயக்குநருமான முத்துகிருஷ்ணன் தெரிவித்தார்.