முகப்பு
இந்த நாளில்...

16.09.1916: எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி அவர்களின் பிறந்த தினம் இன்று

எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி அவர்களின் பிறந்த தினம் இன்று. 

Updated On : 16 செப்டம்பர், 2016 at 1:00 AM
பகிர்:

புகழ் பெற்ற  கர்நாடக இசைப்பாடகி எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி அவர்கள் 16.09.1916 அன்று மதுரையில் பிறந்தார். இவரது குடும்பம் ஒரு சங்கீத பாரம்பரியம் கொண்ட குடும்பமாகும். இவரது முழு பெயரை மதுரை சண்முகவடிவு சுப்புலக்ஷ்மி என்பதாகவும். அனைவராலும் அன்புடன் எம்.எஸ் என்று அழைக்கப்பட்டார்.

தெய்வீகத்தன்மை நிறைந்த தனது பக்திப் பாடல்களால் கேட்பவர் மனத்தைக் கவர்ந்து, அவர்களை வேறொரு ஆன்மீக அனுபவம் நிரம்பிய உலகத்திற்கு கொண்டு சென்றவர்.  இவர் 'இந்தியாவின் நைட்டிங்கேல்' என்றும் புகழப்பட்டார்.

இந்திய அரசால் வழங்கப்படும் மிக உயரிய விருதான 'பாரத ரத்னா' விருது பெற்ற  முதல் பாடகி இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.