இந்த நாளில்...

11.01.1922: நீரிழிவு நோய் சிகிச்சைக்காக முதல் தடவையாக இன்சுலின் பயன்படுத்தப்பட்ட தினம் இன்று!

இன்சுலின்’ என்பது ஒரு ஹார்மோன்; கணையத்தில் உள்ள ‘பீட்டா’ செல் இதைச் சுரக்கிறது.

DIN

இன்சுலின்’ என்பது ஒரு ஹார்மோன்; கணையத்தில் உள்ள ‘பீட்டா’ செல் இதைச் சுரக்கிறது. இதுதான், ரத்தத்தில் குளுக்கோஸ் அளவைச் சரியான அளவில் வைத்துக் கொள்கிறது. இன்சுலின். நீரிழிவுக்காரர்களுக்கு இந்தப் பெயர் பிரபலம். உடலில் இன்சுலின் சுரக்காவிட்டால் நீரிழிவு நோய் வரும் என்றும், கட்டுப்படாத நீரிழிவு நோய்க்கு இன்சுலின் ஊசி போட்டுக்கொள்ள வேண்டியது அவசியம்.

இன்சுலினைக் கண்டுபிடித்து உலக அளவில் உயிரிழப்பைக் குறைத்தவர்கள் கனடாவைச் சேர்ந்த பாண்டிங் (Banting), பெஸ்ட் (Best) எனும் மருத்துவ விஞ்ஞானிகள். 1920ம் ஆண்டுவரை உடலில் கணையத்துக்கும் நீரிழிவுக்கும் தொடர்பு உள்ளது என்பது மட்டும்தான் தெரியும்.

பாண்டிங், தன்னுடைய ஆராய்ச்சியின் முதல்படியாக, ஆரோக்கியமான ஒரு நாயின் கணையத்தை அகற்றி, அதிலிருந்து ஒரு திரவத்தைப் பிழிந்து, அதை நீரிழிவு நோயுள்ள நாய்க்கு ஊசிமூலம் செலுத்தினார். உடனடியாக அந்த நாயின் ரத்த சர்க்கரை குறையத் தொடங்கியது. அதை பல நாய்களிடம் சோதித்துப் பார்த்தார். எல்லா நாய்களுக்கும் ரத்த சர்க்கரை குறைந்தது. அதைத் தொடர்ந்து, நீரிழிவினால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த ‘லியோனார்ட் தாம்சன்’என்ற 19 வயதுச் சிறுவனுக்கு அதைச் செலுத்தினார். அவனுக்கும் நோய் கட்டுப்பட்டது.

இந்த ஆய்வின் மூலம் ‘நீரிழிவு நோய்க்குக் காரணம் இன்சுலின் குறைவு; அதைக் கட்டுப்படுத்த ஒரே வழி இன்சுலினைச் செலுத்துவது’ என்று பாண்டிங் உறுதி செய்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அயலகத் தமிழா் மாநாட்டில் 4 ஒப்பந்தங்கள்

மணப்பாறையில் மயில்களை வேட்டையாடிய 5 போ் கைது

திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்தில் தீ தடுப்பு சோதனை

பெரிய சூரியூா் புதிய மைதானத்தில் மாவட்டத்தின் முதல் ஜல்லிக்கட்டு

கிருஷ்ணகிரியில் தீண்டாமை ஒழிப்பு: முன்னணி சாா்பில் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT