முகப்பு
இந்த நாளில்...

02.06.1943: பிரபல இசையமைப்பாளர் இளையராஜா பிறந்த தினம் இன்று! 

இளையராஜா இந்தியாவின் சிறந்த திரைப்பட இசையமைப்பாளர்களுள் ஒருவர்.

Updated On : 2 ஜூன், 2017 at 12:00 AM
பகிர்:
Updated On : 29 ஜனவரி, 2024 at 8:09 PM

இளையராஜா இந்தியாவின் சிறந்த திரைப்பட இசையமைப்பாளர்களுள் ஒருவர். அன்னக்கிளி என்ற திரைப்படத்துக்கு இசை அமைத்ததன் மூலம் 1976 இல் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். இதுவரை 1000 க்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

இவருக்கு இந்திய அரசின் படைத்துறை-சாரா விருதுகளில் மூன்றாவது உயரிய விருதான பத்ம பூசண் விருது 2010-ஆம் ஆண்டு அளிக்கப்பட்டது.

தமிழக நாட்டுப்புற இசை, கர்நாடக இசை மற்றும் மேற்கத்திய இசையில் புலமையும் முறையான பயிற்சியும் பெற்றவர். சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை நான்கு முறை பெற்றுள்ளார். திரைப்படங்களுக்கான தனது தனித்துவமான சிறந்த பின்னணி இசையமைப்புக்கும் பெயர் பெற்றவர்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.