இந்த நாளில்...

03.06.1924:  தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த தினம் இன்று

தட்சிணாமூர்த்தி என்னும் இயற்பெயர் கொண்ட மு. கருணாநிதி ஜூன் 3, 1924 அன்று நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் முத்துவேலருக்கும், அஞ்சுகம் அம்மையாருக்கும் மகனாகப் பிறந்தார்

DIN

தட்சிணாமூர்த்தி என்னும் இயற்பெயர் கொண்ட மு. கருணாநிதி ஜூன் 3, 1924 அன்று நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் முத்துவேலருக்கும், அஞ்சுகம் அம்மையாருக்கும் மகனாகப் பிறந்தார்.

கருணாநிதி, தனது பள்ளிப் பருவத்தில் நாடகம், கவிதை, இலக்கியம் ஆகியவற்றில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார். நீதிக்கட்சியின் தூணாக கருதப்பட்ட பேச்சாளர் அழகிரிசாமியின் பேச்சால் ஈர்க்கப்பட்ட கருணாநிதி, தனது 14ஆவது அகவையில் இருந்தே  சமூக இயக்கங்களில் முழுமையாக தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.

பெரியார், அண்ணா ஆகியோருடன் கொண்ட நட்பால் முக்கிய அரசியல் தலைவராக உருமாறினார். அண்ணாவின் மறைவுக்குப் பிறகு தற்பொழுது வரை திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக உள்ளார்

கருணாநிதி, தமிழ்த் திரையுலகில் கதை, உரையாடல் பணிகளில் ஈடுபாடு கொண்டவர். 'தூக்குமேடை' நாடகத்தின் போது எம். ஆர். ராதா, இவருக்கு 'கலைஞர்' என்ற பட்டம் அளித்தார். இன்றும் அப்பெயராலேயே இவரது ஆதரவாளர்களால் அழைக்கப்படுகின்றார்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இயக்குநராகும் ஜித்து மாதவன் மனைவி!

நண்பர்களிடையே கருத்து வேறுபாடு இயல்பு! டிரம்ப் - மோடி குறித்து அமெரிக்க தூதர்!

இந்த அறிகுறிகள் எல்லாம் இருக்கிறதா? மன அழுத்தமாக இருக்கலாம்!

வா வாத்தியார் அவர்களுக்கான படம் கிடையாது... நலன் குமாரசாமி!

நமக்குள் பிளவை அனுமதிக்காதீர்: முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT