கலைஞர் கருணாநிதி

மெரினா கடற்கரையில் நினைவிடம் இல்லாத முன்னாள் முதல்வர்கள் இவர்கள்!

தமிழக முதல்வர்களாக இருந்த அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா என 3 பேருக்கு சென்னை மெரினா கடற்கரையில் நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது.

DIN


தமிழக முதல்வர்களாக இருந்த அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா என 3 பேருக்கு சென்னை மெரினா கடற்கரையில் நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து கடற்கரையை நினைவிடங்களாக மாற்றிவிடுவார்களோ என்று அஞ்சி, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்குத் தொடுக்கப்பட்டது. இனி மெரினா கடற்கரையில் யாருடைய நினைவிடத்தையும் அமைக்கக் கூடாது என்று உத்தரவிடக் கோரி அந்த மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு நிலுவையில் இருக்கும் நிலையில்தான் தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மரணம் அடைந்தார். ஆனால் எந்த பெரிய சட்ட சிக்கல்களையும் சந்திக்காமல் எம்ஜிஆர் நினைவிடத்திலேயே ஜெயலலிதாவின் உடல் புதைக்கப்பட்டு நினைவிடமும் கட்டப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், சென்னை மெரினா கடற்கரையில் நினைவிடம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்துத் தொடரப்பட்ட வழக்கை மனுதாரர் வாபஸ் பெற்றதால் வழக்கு தள்ளுபடி செய்யப்படுவதாக சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இது பல்வேறு கேள்விகளை எழுப்பினாலும் பதில் சொல்வார் யாரும் இல்லை.

ஆனால், தமிழக முதல்வர்களாக இருந்து சென்னை மெரினா கடற்கரையில் நினைவிடம் அமைக்கப்படாத முன்னாள் முதல்வர்களையும் தமிழகம் கொண்டுள்ளது.

அவர்களின் பட்டியல்..
பனகல் ராஜா
பி. சுப்பராயன்
பி. முனுசுவாமி நாயுடு
ராமகிருஷ்ண ரங்காராவ்
பி.டி. இராஜன் 
ராமகிருஷ்ண ரங்காராவ் 
கூர்மா வெங்கட ரெட்டி நாயுடு 
சி. இராஜகோபாலாச்சாரி 
த. பிரகாசம் 
ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார்
பூ. ச. குமாரசுவாமி ராஜா 
கே. காமராஜ்
எம். பக்தவத்சலம்
இரா. நெடுஞ்செழியன் (தற்காலிக முதல்வர்)
ஜானகி இராமச்சந்திரன்

இவர்களும் நமது முன்னாள் முதல்வர்கள்தான். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காவல் துறை சாா்பில் போக்குவரத்து விழிப்புணா்வு

உலக சிந்தனை நாள் விழிப்புணா்வு பேரணி

மேல்மருவத்தூா்: 10,000 பக்தா்கள் ஸ்ரீசக்கரம் வரைந்து கூட்டு வழிபாடு செய்து உலக சாதனை

செங்கல்பட்டு குறைதீா் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள்

கைலாசநாதா் கோயில் கும்பாபிஷேகம்

SCROLL FOR NEXT