கல்வி மணி

TNPSC-IV தேர்விற்கான அரங்கம்: பொதுத் தமிழ் - 21

தண்டமிழ் ஆசான், சாத்தன் நன்நூர்புலவன் என்று இளங்கோவடிகள் இவரை பாராட்டியுள்ளார்.

தினமணி

மணிமேகலை
- சீத்தலைச்சாத்தனார்

சொற்பொருள்:

* ஆயம் - தோழியர் கூட்டம்

* ஆசனம் - இருக்கை

* நாத்தொலைவில்லை - சொல் சோர்வின்மை

* யாக்கை - உடல்

* பிணிநோய் - நீங்கா நோய்

* பேதைமை - அறியாமை

* செய்கை - இருவினை

* உணர்வு - அறிவியல் சிந்தனை

* அரு - உருவமற்றது

* உரு - வடிவம்

* வாயில் - ஐம்பொறிகள்

* ஊறு - புலன்களின் இயல்பு

* நுகர்வு - இன்பதுன்ப நுகர்ச்சி

* வேட்கை - விருப்பம்

* பவம் - பயன் நோக்கிய செயல்

* தோற்றம் - பிறப்பு

* பெரும்பேறு - வீடுபேறு

* கொடு - கொம்பு

* அலகில - அளவற்ற

* தொக்க விலங்கு - விலங்குத்தொகுதி

* குரலை - புறம் பேசுதல்

* வெஃகல் - பெருவிருப்பம்

* வெகுளல் - கடுஞ்சினம் கொள்ளுதல்

* பொல்லாக் காட்சி - மாயத் தோற்றம்

* சீலம் - ஒழுக்கம்

* தானம் - கொடை

* புரைதீர் - குற்றம் நீங்கிய

* கேண்மின் - கேளுங்கள்

* உய்ம்மின் - போற்றுங்கள்

* உறைதல் - தங்குதல்

* கூற்று - எமன்

* மாசில் - குற்றமற்ற

* புக்கு - புகுந்து

* இடர் - இன்னல்

* முத்தேர் நகை - முத்துச் சிரிப்பு

* தொழுது - வணங்கி

இலக்கணக் குறிப்பு:

* தேவியும் ஆயமும் - எண்ணும்மை

* அருந்தவர், நல்வினை - பண்புத்தொகை

* வாழ்க - வியங்கோள் வினைமுற்று

* செய்தவம், வீழ்கதிர் - வினைத்தொகை

* பெரும்பேறு - பண்புத்தொகை

* ஆழ்நரகு - வினைத்தொகை

* பல்லுயிர், நல்லவினை, தீவினை, பேரின்பம் - பண்புத்தொகை

* ஆய்தொடி நல்லாய் - இரண்டாம் வேற்றுமா உருபும் பயனும் பயனும் உடன் தொக்க தொகை

* காமத்தீ - உருவகம்

* கடுஞ்சொல் - பண்புத்தொகை

* பொல்லக்காட்சி - ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

* தெளிதல் - தொழிற்பெயர்

* பயன் தெரிபுலவர் - வினைத்தொகை

* அரைசன் - இடைப்போலி

* நல்லறம் - பண்புத்தொகை

பிரித்தறிதல்:

* எழுந்தெதிர் = எழுந்து + எதிர்

* அறிவுண்டாக = அறிவு + உண்டாக

* இயல்பீராறு = இயல்பு + ஈறு + ஆறு

* நன்மொழி = நன்மை + மொழி

* எனக்கிடர் = எனக்கு + இடர்

* நல்லறம் = நன்மை + அறம்

* தொழுதேத்தி = தொழுது + ஏத்தி

* உண்டென்று = உண்டு + என்று

ஆசிரியர் குறிப்பு:

* மணிமேகலையின் ஆசிரியர் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார்.

* சாத்தான் என்பது இவரின் இயற்பெயர்.

* இவர் திருச்சியில் உள்ள சீத்தலை என்னும் ஊரில் பிறந்து மதுரையில் வாழ்ந்தவர்

* தானிய வாணிகம் செய்தவர்.

* தண்டமிழ் ஆசான், சாத்தன் நன்நூர்புலவன் என்று இளங்கோவடிகள் இவரை பாராட்டியுள்ளார்.

* இவரது காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு.

* இவர் கடைச்சங்கப் புலவர்களுள் ஒருவர்.

* இளங்கோவடிகளும் இவரும் சமகாலத்தவராவர்.

நூல் குறிப்பு:

* இந்நூல் ஐம்பெரும்காபியங்களுள் ஒன்று.

* சிலப்பதிகாரமும் மணிமேகலையும் ஒரே கதைத் தொடர்புடையவை.

* இவை இரண்டும் "இரட்டை காப்பியங்கள்" என அழைக்கப்படும்.

* மணிமேகலையின் துறவு வாழ்க்கையைக் குறுவதனால் இந்நூலுக்கு "மணிமேகலை துறவு" என்ற பெயரும் உண்டு.

* இந்நூல் பெளத்த சமயச் சார்பு உடையது.

* முப்பது காதைகள் கொண்டது. இருபத்தி நான்காவது காதை என்பது ஆபுத்திரன் நாடு அடைந்த காதை பாடப் பகுதியாக இடம்பெற்றுள்ளது.

* கோவலனுக்கும் மாதவிக்கும் பிறந்த மகள் - மணிமேகலை

* தீவதிலகையின் உதவியால் அழுத சுரபியைப் பெற்றுப் புகார் நகரை மணிமேகலை அடைந்தாள்.

ஐம்பெரும்காப்பியங்கள்:

* சிலப்பதிகாரம்

* மணிமேகலை

* சீவக சிந்தாமணி

* வளையாபதி

* குண்டலகேசி

உணவே மருந்து

* தமிழர் மருத்துவத்தில் உணவு என்பது அணைத்து நோய்களையும் தீர்க்கக்கூடிய சஞ்சீவி மருந்தாக கருதப்படுகிறது.

* பசியின் கொடுமையை "பசிப்பிணி என்னும் பாவி" என்றது மணிமேகலை காப்பியம்.

* "உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே" என மணிமேகலையும் . புறநானூறும் கூறுகின்றன.

* திருக்குறளில் மருந்து என்னும் அதிகாரத்தில் உணவே மருந்தாகும் தன்மையை திருவள்ளுவர் தெளிவாக கூறியுள்ளார்.

* முன் உண்டது செரித்தது கண்டு உண்பார்க்கு மருந்துண்ணும் தேவை ஏற்படாது என்பது வள்ளுவர் வாக்கு.

* நம் நாட்டு சமையலுக்கு புழுங்கல் அரிசியே சிறந்தது.

* நோய்க்கு முதல் காரணம் உப்பு.

* "மீதூண் விரும்பேல்" என்றவர் ஒளவை.

* நீரின்றமையாது உலகு எனக் கூறியவர் - வள்ளுவர்.

* உடலைக் காத்தலின் தேவையை வலியுறுத்தியவர் - திருமூலரும்.

அறுசுவையின் பயன்கள்:

* இனிப்பு - வளம்

* துவர்ப்பு- ஆற்றல்

* கைப்பு - மென்னை

* கார்ப்பு - உணர்வு

* உவர்ப்பு - தெளிவு

* புளிப்பு - இனிமை

நோய் நீக்கும் மூலிகைகள்

கீழக்காய்நெல்லி:

* இதனை கீழாநெல்லி, கீழ்வாய்நெல்லி என்று கூறுவர்.

* மஞ்சள் காமாலைக்கு கைகண்ட மருந்தாக பயன்படுகிறது.

* இதனை கற்கண்டுடன் சேர்த்து உண்பதால் சிறுநீர்த் தொடர்பான நோய்கள் நீங்கும்.

துளசி:

* துளசி செயிடின் இலைகளை நீரில்இட்டு கொதிக்க செய்து ஆவி பிடித்தால் மார்புசளி, நார்க்கோவை, தலைவலி நீங்கும்.

* துளசி இலைகள் பூசினால் படை நீங்கும்.

தூதுவளை:

* இது செடி வகை இல்லை, இது கொடி வகையை சேர்ந்தது.

* இக்கொடியில் சிறு முள்கள் உண்டு.

* இதனை தூதுளை, சிங்கவல்லி என்றும் அழைப்பர்.

* வள்ளலார் இதனை "ஞானப்பச்சிலை" என்று கூறுவார்.

* இது குரல் வளத்தை மேம்படுத்தும், வாழ்நாளை நீடிக்கும்.

குப்பைமேனி:

* குப்பைமேனி, நச்சுக்கடிகளுக்கு நல்ல மருந்து.

* இதனை "மேனி துலங்க குப்பைமேனி" என்று சிறபிப்பர்.

கற்றாழை:

* இது வறண்ட நிலத்தாவரம்.

* இதனை "குமரி" என்பர்.

* பெண்களின் கருப்பை சார்ந்த நோய்களை நீக்குவதால் "குமரி கண்ட நோய்க்கு குமரி கொடு" என்பர்.

முருங்கை:

* இதனை அரைத்து தடவினால் எலும்பு முறைவி விரைவில் கூடும்.

* இரும்பு சத்து நிறைந்துள்லதால் கூந்தலை வளரச் செய்வதில் பெரும் பங்கு உண்டு.

கறிவேப்பில்லை:

* இது சீதபேதி, நச்சு போன்றவற்றை சரி செய்யும். மணமூட்டி உணவின் மாது விருப்பை உண்டாக்கும்.

கரிசலாங்கண்ணி:

* இரத்தசோகை, செரிமான கோளாறு, மஞ்சள் காமாலைக்கு சிறந்த மருந்து.

* கண் பார்வையை தெளிவாக்கும்

* நரையை போக்கும்.

* இதனை "கரிசாலை, கையாந்தகரை, பிருங்கராசம், தேகராசம்" என்று கூறுவர்.

* மணித்தகாகாளிக்கீரை வாய்ப்புண்ணையும், குடற்புண்ணையும் குணப்படுத்தும்.

* அகத்திக்கீரை பல் சார்ந்த நோய்களை குணமாக்கும்.

* வல்லாரை நினைவாற்றலை பெருக்க உதவும்.

* வெப்ப நாடான நமது நாட்டுச் சமையலுக்குப் புழுங்கலரிசியே ஏற்றது.

* மஞ்சள் நெஞ்சிலுள்ள சளியை நீக்கும்.

* கொத்துமல்லி - பித்தத்தைப் போக்கும்

* சீரகம் - வயிற்றுச் சூட்டைத்தணிக்கும்

* மிளகு - தொண்டைக் கட்டைத் தொலைக்கும்

* பூண்டு - வளியகற்றி வயிற்றுப்பொருமலை நீக்கிப் பசியை மிகுவிக்கும்

* வெங்காயம் - குளிர்ச்சி உண்டாக்கிக் குருதியைத் தூய்மைப்படுத்தும்.

* பெருங்காயம் - வளியை வெளியேற்றும்.

* இஞ்சி - பித்தத்தை ஒடுக்கிக் காய்ச்சலைக் கண்டிக்கும்.

* தேங்காயை - நீர்க்கோவையை நீக்கும்.

* நல்லெண்ணெய் கண் குளிர்ச்சியும் அறிவுத்தெளிவும் உண்டாக்கும்.

பழமொழி:

* நொறுக்குத் தீனி வயிற்றுக்குக் கேடு

* நொறுங்கத் தின்றால் நூறு வயது

* அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு

திருக்குறள்

* கடன் - கடமை

* சான்றோர் - நல்ல குணங்கள் நிறைந்தவர்

* நாண் - நாணம்

* ஒப்புரவு - உதவுதல்

* கண்ணோட்டம் - உயிர்களிடத்து இரக்கம்

* வாய்மை - உண்மை

* சால்பு - சான்றாண்மை

* ஆற்றுவார் = செயல் செய்பவர்

* ஆற்றல் - வலிமை

* மாற்றார் -பகைவர்

* துலையல்லார் - ஆற்றலில் குறைந்தவர்

* கட்டளை - உரைகடல்

* இன்னா - தீங்கு

* இனிய - நன்மை

* செய்யாக்கால் - செய்யாவிடத்து

* இன்மை - வறுமை

* இளிவன்று - இழிவானதன்று

* திண்மை - வலிமை

* ஊழி - உலகம்

* ஆழி - கடல்

* இருநிலம் - பெரிய நிலம்

* பொறை - சுமை

* என்ப - பலர்பால் வினைமுற்று

* மேற்கொள்பவர் - வினையாலணையும் பெயர்

* உள்ளதூஉம் - இன்னிசையளபெடை

* அன்று - குறிப்புவினை முற்று

* கண்ணோட்டம் - தொழிற்பெயர்

* கொல்லா நலத்தது, சொல்லா நலத்தது - ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

* பணிதல் - தொழிற்பெயர்

* ஆற்றுவார், மாற்றார் - வினையாலணையும் பெயர்

* இன்மை, திண்மை - பண்புப் பெயர்கள்

* சான்றவர் - வினையாலணையும் பெயர்

* இருநிலம் - உரிச்சொற்றொடர்

* மன், ஓ - அசைச்சொற்கள்

இன்பம்

கற்றவர் முன்தாம் கற்ற

கல்வியைக் கூறல் இன்பம்

வெற்றியை வாழ்வில் சேர்க்கும்

வினைபல புரிதல் இன்பம்

சிற்றினக் கயவரோடு

சேராது வாழ்தல் இன்பம்

பெற்றதை வழங்கி வாழும்

பெருங்குணம் பெறுதல் இன்பம்

- சுரதா

* இசைபட - புகழுடன்

* கயவர் - கீழ்க்குணமுடையோர்

இலக்கணக்குறிப்பு:

* தளிர்க்கை - உவமைத்தொகை

* பழந்தமிழ், சிற்றினம், பெருங்குணம் - பண்புத்தொகை

* வழங்கி - வினையெச்சம்

* கற்றல், பெறுதல், வாழ்தல் - தொழிற்பெயர்

* உவமை கவிஞர் சுரதா அவர்களின் இயற்பெயர் இராசகோபாலன்.

* இவர் நாகை மாவட்டம் பழையனூரில் 23.11.1921 அன்று பிறந்தார்.

* பெற்றோர் - திருவேங்கடம், செண்பகம்

* பாவேந்தர் பாரதிதாசன் மீது கொண்ட பற்றின் காரணமாகத் தம் பெயரை சுப்புரத்தினதாசன் என மாற்றிக்கொண்டார். அதன் சுருக்கமே சுரதா.

படைப்புகள்:

* தேன்மழை, துறைமுகம்,

* சுவரும் சுண்ணாம்பும், சுரதாவின் கவிதைகள்

நூல் குறிப்பு:

* தேன்மழை நூலில் இயற்கையெழில் முதலாக ஆராய்ச்சி ஈறாகப் பதினாறு பகுதிகளாகக் கவிதைகள் இடம் பெற்றுல்ளன. அவற்றுள் தேன்துளிகள் என்னும் பகுதியில் இப்பாடல் இடம் பெற்றுள்ளது.

சிறப்பு:

* இவரின் தேன்மழை நூல் தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலுக்கானப் பரிசை பெற்றுள்ளது.

* இவர் கலைமாமணி பட்டத்தையும், தமிழக அரசின் பாவேந்தர் விருதையும் பெற்றுள்ளார்.

* குழந்தையின் தளிர்க்கைபட்ட கூழினை உண்பது இன்பம்.

* கற்றவர் முன் தாம் கற்ற கல்வியைக் கூறல் இன்பம்

* வெற்றியை வாழ்வில் சேர்க்கும் வினைபல பிரிதல் இன்பம்

* சிற்றினக் கயவரோடு சேராது வாழ்தல் இன்பம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கமல்ஹாசனுக்கு கொலை மிரட்டல்- சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்

உத்தரகண்ட் இயற்கை பேரிடர்: 10 ஆண்டுகளில் 3,500 பேர் பலி

“காஸாவில் எப்போது சண்டையை நிறுத்துவீர்கள்?” -இஸ்ரேலில் நெதன்யாகுவுக்கு எதிராக மக்கள் போராட்டம்!

ஆஸி.யை முதல்முறையாக ஆல் அவுட் செய்த தெ.ஆ.: சதமடிக்க தவறிய டிம் டேவிட், ஆஸி. 178 ரன்கள்!

புதிய சிம் கார்ட் வாங்கியவருக்கு கிரிக்கெட் வீரரின் பழைய மொபைல் எண் ஒதுக்கப்பட்டதால் குழப்பம்

SCROLL FOR NEXT