கல்வி மணி

TNPSC-IV தேர்விற்கான அரங்கம்: பொதுத் தமிழ் - 26

திருச்சிராப்பள்ளியில் பாரதிதாசன் பெயரில் பல்கலைக்கழகம் அமைத்துச் சிறப்புச் சேர்த்துள்ளது.

தினமணி

தமிழ் வளர்ச்சி

- பாவேந்தர் பாரதிதாசன்

* பாவேந்தர் பாரதிதாசனின் இயற்பெயர் - சுப்புரத்தினம்

*  பிறப்பு: 1891 ஏப்ரல் 29 புதுவையில் பிறந்தார்.

* தாய்: இலக்குமி

* தந்தை: கனகசபை

* படைப்புகள்: குடும்ப விளக்கு, இருண்டவீடு, தமிழியக்கம், பாண்டியன் பரிசு, அழகின் சிரிப்பு

* சிறப்பு பெயர்: , பாவேந்தர், புரட்சிக்கவிஞர்

* சிறப்பு: பாரதிதாசன் பரம்பரை என்றொரு கவிஞர் பரம்பரையே அவர் காலத்தில் உருவானது.

* தமிழக அரசு, பாவேந்தர் படைப்புகளை நாட்டுடைமையாக்கியுள்ளது.

* ஆண்டு தோறும் சிறந்த கவிஞர்களுக்குப் பாவேந்தர் விருது வழங்கி வருகிறது

* திருச்சிராப்பள்ளியில் பாரதிதாசன் பெயரில் பல்கலைக்கழகம் அமைத்துச் சிறப்புச் சேர்த்துள்ளது.

சொற்பொருள்:

* தெளிவுறுத்தம் - விளக்கமாகக் காட்டும்

* சுவடி - நூல்

* எளிமை - வறுமை

* உலகியலின் அடங்கலுக்கும் - வாழ்வியல் முழுமைக்கும்

* நாணிடவும் - வெட்கப்படவும்தகத்தகாய - ஒளிமிகுந்த

* சாய்க்காமை - அழிக்காமை

* நூற்கழகங்கள் - நூலகங்கள்

* களைந்தோம் - நீக்கினோம்

* தாபிப்போம் - நிலைநிறுத்துவோம்

இலக்கணக்குறிப்பு:

* புதிது பதிது, சொல்லிச் சொல்லி - அடுக்குத்தொடர்கள்

* செந்தமிழ் - பண்புத்தொகை

* சலசல - இரட்டைக்கிளவி

பிரித்தறிதல்:

* வெளியுலகில் - வெளி + உலகில்

* செந்தமிழ் - செம்மை + தமிழ்

* ஊரறியும் - ஊர் + அறியும்

* எவ்விடம் - எ + இடம்

உரைநடை: பெரியாரின் பெண் விடுதலைச் சிந்தனைகள்

தொண்டு செய்து பழுத்த பழம்

தூயதாடி மார்பில் விழும்

மண்டைச் சுரப்பை உலகு தொழும்

* மனக்குகையில் சிறுத்தை எழும். இப்பாடல் வரிகள் பெரியாரைப் பற்றிய பாவேந்தரின் படப்பிடிப்பு.

* பெண்களின் சமூக விடுதலைக்காக போராடியவர் - பெரியார்.

* பெரியாரின் இரண்டு பெண்விடுதலைச் சிந்தனைகள் 1. அடிப்படைத் தேவைகள் 2. அகற்றப்படவேண்டியவை

* அடிப்படைத் தேவைகள்: பெண்கல்வி, பெண்ணுரிமை, சொத்துரிமை, அரசுப்பணி

* அகற்றப்படவேண்டியவை: குழந்தை திருமணம், மணக்கொடை, கைம்மை வாழ்வு

* பெண்கள் கல்வி கற்றாலொழிய சமூக மாற்றங்கள் ஏற்படாது என்றவர் பெரியார்.

* பெண்களைப் பகுத்தறிவற்ற சீவன்களாய் வைத்திருக்கும் கொடுமை ஒழிக்கப்பட் வேண்டும் என்றவர் - பெரியார்.

* ஆண்கள் பெண்களைப் படிக்க வைக்கவேண்டும். அவர்களுக்கு உலகப் படிப்பும், ஆராய்ச்சிப் படிப்பும் தாராளமாய்க் கொடுக்க வேண்டும் என்றவர் - பாரதியார்.

* பெண்கள் உரிமை பெற்றுப் புது உலகைப் படைக்கவேண்டும் என்று விரும்பியவர் - பெரியார்

* ஆணுக்குப் பெண் இளைப்பில்லை - என்று சிந்தித்தவர் - பெரியார்

* பெண்கள் தத்தம் கணவனுக்கு மட்டுமே உழைக்கும் அடிமையாக இராமல், மனிதசமுதாயத்திற்குத் தொண்டாற்றும் புகழ் பெற்ற பெண்மணிகளாக விளங்கவேண்டும் என்று வலியுறுத்தியவர் - பெரியார்.

* சடங்குகளையும் மூடநம்பிக்கைகளையும் களைவதில் உறுதியான உள்ளம் படைத்தவராக இருந்தவர் - பெரியார்

* சிற்றில் சிதைத்து விளையாடும் பருவத்தில் பெற்றோர் செய்த விளையாட்டு எனக்கூறி அதனை நீக்கப் பாடுபட்டவர் - பெரியார்.

* தமிழர்களிடம் இன்று பரவியுள்ள பெருநோய் ஒன்று உண்டு. அதுவே மணக்கொடை.

* பெண்களே சமூகத்தின் கண்கள் எனக் கருதியவர் பெரியார்

* அரசின் அனைத்துத் துறைகளிலும் பெண்கள் பணியாற்றும்போது நம் சமுதாயத்தில் புட்சி ஏற்படும் என்றவர் - பெரியார்

* பெண் அடிமை ஆனதற்கு உரிய காரணங்களுள் ஒன்று சொத்துரிமை

* பெரியார் சமூக முரண்களை எதிர்த்தவர்; மூடக்கருத்துகளை முட்டறுத்தவர்.

இலக்கணம்: சொல்

* ஒரு சொல் தனித்து நின்றோ, பல எழுத்துகள் தொடர்ந்து நின்றோ பொருள் தருவது - தனிமொழி

* பதம், மொழி, கிளவி என்பன ஒரு பொருள்தரும் பல சொற்கள்.

* பதம் - பகுபதம் (பகுக்கவியலும் பதம்);  பகாப்பதம் (பகுக்கவியலாப் பதம்)

* மொழி - தனிமொழி, தொடர்மொழி, பொதுமொழி

* கிளவி - இரட்டைக்கிளவி (இரட்டைச்சொல்)

* எ.கா: பூ, கை, தா, வா - இவை ஓரெழுத்துச் சொற்கள்

* மண், மாந்தர், நடந்தனர் இவை இரண்டு முதலாகப் பல எழுத்துகள் தொடர்ந்த சொற்கள்.

* மொழி - தனிமொழி, தொடர்மொழி, பொதுமொழி என மூவகைப்படும்.

* ஒரு சொல் தனித்து நின்று பொருளை உணர்த்துவது தனிமொழி.

* இரண்டு அல்லது அதற்குமேற்பட்ட சொற்கள் தொடர்ந்துவந்து பொருளை உணர்த்துவது தொடர்மொழி.

* ஒரு சொல் தனித்து நின்று ஒரு பொருளையும், அச்சொல்லே பிற சொற்களுடன் தொடர்ந்துநின்று வேறு பொருளையும் தந்து, தனிமொழிக்கும் தொடர்மொழிக்கும் பொதுவாய் அமைவது பொதுமொழி.

* தொழிலைக் குறிக்கும் சொல் - வினைச்சொல்

* வினைமுற்று தெரிநிலை வினைமுற்று, குறிப்பு வினைமுற்று என இருவகைப்படும்.

* ஓர் எச்ச வினை பெயரைக் கெண்டு முடிந்தால், அது பெரயெச்சம் எனப்படும்.

* முற்றுப்பெறாத வினைச்சொற்கள் (எச்சங்கள்) வேறொரு வினைமுற்றைக்கொண்டு முடிந்தால், அது வினையெச்சம் எனப்படும்.

* வினையெச்சம் இறந்தகால வினையெச்சம், நிகழ்கால வினையெச்சம், எதிர்கால வினையெச்சம் என மூன்று வகைப்படும்.

தொகைச்சொற்களை விரித்தெழுதுக

* இருவினை - நல்வினை, தீவினை, தன்வினை, பிறவினை

* இருதிணை - உயர்திணை, அஃறிணை, அகத்திணை, புறத்திணை

* முத்தமிழ் -  இயல்,  இசை, நாடகம்

* முப்பால் - அறம், பொருள், இன்பம்

* மூவிடம் - தன்மை, முன்னிலை, படர்க்கை

* மூவேந்தர் - சேரன், சோழன்,. பாண்டியன்

* நாற்றிசை - கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு

* நானிலம் -  குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல்

* ஐந்திணை - குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை

* ஐம்பால் - ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன்றன்பால், பலவின்பால்

* ஐம்புலன் - தொடுஉணர்வு, உண்ணல், உயிர்த்தல், காணல், கேட்டல்

* ஐம்பொறி - மெய், வாய், மூக்கு, கண், செவி

இணையான தமிழ்ப்பழமொழிகளை அறிக:

* Charity begins at home - தனக்கு மிஞ்சியே தானமும் தருமமும்.

* Covet all lose all - பேராசை பெருநட்டம்

* Diamonds cut diamonds - முள்ளை முள்ளால் எடு

* East or west, home is the best - எலி வளையானாலும் தனி வளையே சிறந்தது.

* Enpty vessels make the greatest sound - குறை குடம் கூத்தாடும்.

செய்யுள்:

* கம்பராமாயணம் - அயோத்தியா காண்டம் குகப்படலம்

சொற்பொருள்:

* ஆயகாலை - அந்தநேரத்தில்

* அம்பி - படகு

* நாயகன் - தலைவன்

* நாமம் - பெயர்

* துறை - தோணித்துறை

* தொன்மை - தொன்றுதொட்டு

* கல் - மலை

* திரள் - திரட்சி

* காயும் வில்லினன் - பகைவர்களை அழிக்கும் வில்லாற்றல் பெற்றவன்

* துடி - பறை

* அல் - இருள்

* சிருங்கிபேரம் - கங்கைக்கரையோர நகரம்

* திரை - அலை

* மருங்கு - பக்கம்

* உபகாரத்தன் - பயன்கருதாது உதவுபவன்

* கூவா முன்னர் - அழைக்கும் முன்னர்

* குறுகி - நெருங்கி

* இறைஞ்சி - வணங்கி

* சேவிக்க - வணங்க

* நாவாய் - படகு

* நெடியவன் - உயர்ந்தவனாகிய இராமன்

* குறுகினன் - வந்துள்ளான்

* இறை - தலைவன்

* பண்ணவன் - நற்குணங்கள் பல உடைய இலக்குவன்

* பரிவு - இரக்கம்

* குறிஞ்சி - தலைமுடி

* மேனி - உடல்

* அருத்தியன் - அன்பு உடையவன்

* மாதவர் - முனிவர்

* முறுவல் - பன்னகை

* விளம்பல் - கூறுதல்

* சீர்த்த - சிறந்த

* பவித்திரம் - தூய்மையானது

* இனிதின் - இநிமையானது

* உண்டனெம் - உண்டோம் என்பதற்குச் சமமானது

* தழீஇய - கலந்த

* கார்குலாம் - மேகக்கூட்டம்

* பார்குலாம் - உலகம் முழுதும்

* இன்னல் - துன்பம்

* ஈர்கிலா - எடுக்க இயலாத

* தீர்கிலேன் - நீங்கமாட்டேன்

* அடிமைசெய்குவென் - பணிசெய்வேன்

* கடிது - விரைவாக

* முடுகின - செலுத்தினன்

* முரிதிரை - மடங்கிவிழும் அலை

* இடர் - துன்பம்

* அமலன் - குற்றமற்றவன்

* நுதல் - நெற்றி

* இளவல் - தம்பி

* உன்னேல் - நினைக்காதே

* முடுகினன் - செலுத்தினன்

* நயனம் - கண்கள்

* இந்து - நிலவு

* குரிசில் - தலைவன்

* இருத்தி - இருப்பாயாக

இலக்கணக்குறிப்பு:

* போர்க்குகன் -இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்கதொகை

* கல்திரள்தோள் - உவமைத்தொகை

* நீர்முகில் - இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்கதொகை

* திரைக்கங்கை - இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்கதொகை

* இருந்தவள்ளல் - பெயரெச்சம்

* வந்துஎய்தினான் - வினையெச்சம்

* கூவா - கூறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

* குறுகி, சேவிக்க - வினையெச்சங்கள்

* தேவா - விளி

* கழல் - தானியாகுபெயர்

* வந்தனென் - தன்மை ஒருமை வினைமுற்று

* அழைத்தி(அழைப்பாய்) - முன்னிலை ஒருமை வினைமுற்று

* வருக - வியங்கோள் வினைமுற்று

* பணிந்து, வளைந்து, புதைத்து - வினையெச்சங்கள்

* இருத்தி - முன்னிலை ஒருமை வினைமுற்று

* தேனும் மீனும் - எண்ணும்மை

* மாதவர் - உரிச்சொற்றொடர்

* அமைந்த காதல் - பெயரெச்சம்

* சீர்த்த - ஒன்றன்பால் வினைமுற்று

* தழீஇய (தழுவிய) - சொல்லிசை அளபெடை

* கார்குலாம்(காரது குலாம்) - ஆறாம் வேற்றுமைத்தொகை

* உணர்த்துவான் - வினையாலணையும் பெயர்

* பார்த்தகண்ணை - பெயரெச்சம்

* தீர்கிலேன் - செய்குவென் - தன்மை ஒருமை வினைமுற்றுகள்.

* நனிகடிது - உரிச்சொற்றொடர்

* நெடுநாவாய், நெடுநீர் - பண்புத்தொகைகள்

* என்னுயிர் - ஆறாம் வேற்றுமைத்தொகை

* நின்கேள் - நான்காம் வேற்றுமைத்தொகை

* தாமரை நயனம் - உவமைத்தொகை

* தீராக் காதலன் - ஈறுகெட்ட எதிர்மறைப்பெயரெச்சம்

* மலர்ந்த கண்ணன் - பெயரெச்சம்

* இனிய நண்ப - குறிப்புப் பெயரெச்சம்

ஆசிரியர் குறிப்பு:

* பிறந்த ஊர்- தேரழுந்தூர் (நாகை மாவட்டம்)

* தந்தை - ஆதித்தன்

* காலம் - இரண்டாம் குலோத்துங்கன் காலத்தில் வாழ்ந்தவன்

* ஆதரித்தவர் - திருவெண்ணெய் நல்லூர்ச் சடையப்ப வள்ளல்

* செய்ந்நன்றி மறவா இயல்பினார்.

* தம்மை ஆதரித்த வள்ளல் சடையப்பரை ஆயிரம் பாடல்களுக்கு ஒரு பாடல் எனப் பாடிச் சிறப்பித்துள்ளார்.

* கம்பரது காலம் - கி.பி.12 ஆம் நூற்றாண்டு

* இயற்றிய நூல்கள் - கம்பராமாயணம், சடகோபரந்தாதி, ஏரெழுபது, சிலையெழுபது, சரசுவதி, அந்தாதி, திருக்கை வழக்கம்

* சமகாலத்துப் புலவர்கள் - செயங்கொண்டார், ஒட்டக்கூத்தர், புகழேந்தி

* யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல் என்று பாரதியார் புகழ்ந்து பாடியுள்ளார்.

* வடமொழியில் கம்பராமாயணத்தை வால்மீகி முனிவர் எழுதினார். கம்பர் தாம் இயற்றிய நூலுக்கு இராமாவதாரம் எனப் பெயரிட்டார்.

* கம்பராமாயணத்தில் 6 காண்டங்கள் உள்ளன.

* 1. பாலகாண்டம்

* 2. அயோத்தியா காண்டம்

* 3. ஆரண்ய காண்டம்

* 4. கிட்கிந்தா காண்டம்

* 5. சுந்தர காண்டம்

* 6. யுத்த காண்டம்

* தமிழுக்குக் கதி என்ற சிறப்பும் கம்பராமாயணத்திற்கு உண்டு.

* குகப்படலத்தை கங்கைப்படலம் எனவும் கூறுவர்.

* இராமனது வரலாற்றைக் கூறும் நூல் இராமாயணம் எனப்பட்டது.

* கம்பராமாயணத்தில் அயோத்தியா காண்டம் இரண்டாம் காண்டமாகும்.

* அயோத்தியா காண்டத்தில் 13 படலங்கள் உள்ளன.

* பாடப்பகுதியான குகப்  படலம் ஏழாம் படலமாகும்.

* இப்பகுதியைக் கங்கைப் படலம் எனவும் கூறுவர்.

* கம்பராமாயணம் பெருங்காப்பியத்திற்குரி்ய இலக்கணங்களை முழுமையாகப் பெற்றது.

* பொருள், அணி, நடை ஆகியவற்றால் சிறந்தது.

* கற்போர்க்கு இனிமை தரும் கவிச்சுவை நிறைந்தது.

* சொற்சுவையும் பொருட்சுவையும் தமிழ்ப் பண்பாடும் மிளிர்ந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மொச்சை பட்டாணி சுண்டல்

கீா்த்தி நகரில் பழைய பொருள் கிடங்கில் தீ விபத்து

தலைநகரில் தானியங்கி பல அடுக்கு வாகனம் நிறுத்துமிடத்தை திறந்து வைத்த ரேகா குப்தா

தேச துரோக பேச்சு நடிகா் பிரகாஷ் ராஜீ மிது தில்லி போலீஸாா் வழக்குப்பதிவு

தாா் வாகனம் சாலைத் தடுப்பில் மோதி 5 போ் பலி! தில்லி குருகிராம் விரைவு சாலையில் சம்பவம்!

SCROLL FOR NEXT