கவிதைமணி

எதிர்கால கனவு: அதி. இராஜ்திலக்

கவிதைமணி

வயலிலே நெல்லிருக்க
வறுமையும் தள்ளியிருக்க
வயதிலே வரும் கனவு
வாழ்க்கையில் எதிர்ப்படுமே.
 
உலையில் சோறிருக்க
உழவனை   சுரண்டாதிருக்க
ஆற்றிலே நீருக்க
ஆட்சியும் நடைபெறுமே
 
இலையிலே  இன்பமிருக்க
இல்லறத்தில் அமைதியிருக்க
கலையிலே இறையிருக்க
காலங்கள் வாய்த்திருக்கும்
 
கல்வியில் அறிவிருக்க
காசிலே அறமுமிருக்க
ஊழலும் ஒழிந்திருக்க 
ஒற்றுமையும் ஓங்கியிருக்கும்
 
நோய்மூப்பு தள்ளிருக்க  
நூறாண்டு ஆயுலிருக்க
உறவுகள் சூழ்ந்திருக்க
உள்ளங்கள் களித்திருக்கும்
 
குற்றங்களும் தொலைந்திருக்க
கொடுமைகளும் இல்லாதிருக்க
நேர்மையிலே கடமையிருக்க
நீதியிலே ஒழுங்கிருக்கும்
 
குப்பைகளும் குறைந்திருக்க
கொசுக்களோ தோன்றாதிருக்க
நெகிழிகளும் நுகராதிருக்க
நெஞ்சத்தில் அன்பிருக்கும்
 
கரிய அமிலம் காணாதிருக்க
காற்று மண்டலம் தூய்மையாயிருக்க
நச்சில்லா புகையிருக்க
நறுந்தொழில்கள் செழித்திருக்கும்
 
அணுஆயுதம் மரித்திருக்க 
அன்பு வழி நிரம்பிருக்க
மனித நேயம் உயர்ந்திருக்க
மக்களெல்லாம் சிரித்திருப்பர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இஸ்ரேலுக்குச் செல்லும் பிரதமர் மோடி: நெதன்யாகுவுடன் புதன்கிழமை சந்திப்பு!

உச்ச மதிப்புள்ள முதல் 6 நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ. 63,000 கோடியாக உயர்வு!

ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தில் அப்ரண்டீஸ் பயிற்சியில் சேர வேண்டுமா..?

சர்வதேச அரங்கில் சொந்த நாட்டுக்குத் தலைகுனிவை ஏற்படுத்தும் காங்கிரஸ்! - பிரதமர் மோடி

சூப்பர் 8 சுற்று: இந்தியாவுக்கு எதிராக தென்னாப்பிரிக்கா பேட்டிங்!

SCROLL FOR NEXT