கவிதைமணி

எதிர்கால கனவு" ரீகன் •ஜெயக்குமார்

கவிதைமணி

கண்மாய் ஆறுகுளம்
ஒருகாலத்தில்
கனவில்
மட்டுமே வருங்காலத்தில் !
காட்சியாகப்
போகுது அரங்கங்களில்
காட்சியகத்தில்
கருப்பு வெள்ளையாய் !
அன்னைக்கு துணையாய்
அரும்பும்
அண்ணாந்து நோக்குது குறும்பாய் !
ஆழ்ந்த சிந்தனையில் என்னவோ
ஆழ்மனதில் எதிர்கால
நினைவோ !
சிந்திக்க ஆரம்பித்தால்
சிறுவயதில்
சிகரத்தை தொடலாமே வாழ்வினில் !
சீரழியும் சமுதாயமும்
சீர்பெறவே
சீரான சிந்தனைகளும்
அவசியமே !
சிந்தனையின் துளிகளும்
சிந்தையில்
சிறிதேனும் தேங்கினால்
சிறக்குமே !
சிதறாமல் சேமித்தால்
சிந்தனைகள்
சிறுதுளி பெருவெள்ளமாய்
பெருகுமே !
இனிதே இளமைக்காலம்
பிறப்பினில்
இன்பமே இறுதிக்காலம்
நினைவினில் !
இன்புற்று வாழ்ந்திடவே இளைஞர்களே
இனியேனும் சிந்தியுங்கள்
நல்லதையே !

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இஸ்ரேலுக்குச் செல்லும் பிரதமர் மோடி: நெதன்யாகுவுடன் புதன்கிழமை சந்திப்பு!

உச்ச மதிப்புள்ள முதல் 6 நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ. 63,000 கோடியாக உயர்வு!

ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தில் அப்ரண்டீஸ் பயிற்சியில் சேர வேண்டுமா..?

சர்வதேச அரங்கில் சொந்த நாட்டுக்குத் தலைகுனிவை ஏற்படுத்தும் காங்கிரஸ்! - பிரதமர் மோடி

சூப்பர் 8 சுற்று: இந்தியாவுக்கு எதிராக தென்னாப்பிரிக்கா பேட்டிங்!

SCROLL FOR NEXT