கவிதைமணி

பணத்தின் மறுபக்கம் : மூ.மோகன்.

கவிதைமணி

கறுப்புப்பணத்தை ஒழிக்க புறப்பட்ட
காகிதப்பணமே இன்று அடக்கமாய்
வங்கிகளில் அடைக்கலமானது -

'செல்லா' நோட்டுக்களாய்...
சிறகொடிந்த பறவைகளாய்!

முதல் சம்பள மகிழ்ச்சியில்...
'காசு..பணம்..துட்டு..மணி..மணி!' என
குதூகலித்த மனதின் குரல்
காணாமல் போனது வங்கியில்-
காசு தரும் எந்திரத்தில்
காசெடுக்க கால் கடுக்க
நின்ற கணத்தில் வந்த
பசி மயக்கத்தில்!

காசிருந்தால் இவ்வுலகில் எதையும்
சாதிக்கலாம் என்ற இறுமாப்பில்
இடியொன்று இறங்கியது
வெளிவந்து விழுந்த புதுப்பணம்
ஒற்றைத்தாள் இரண்டாயிரத்தால்!

பணத்தின் முன் பக்கத்தில்...  
மெல்லச் சிரிக்கும் 'மகாத்மா';
மறு பக்கத்தில் 'மங்கள்யான்'!
எல்லாமே மெல்லப் புரிந்தது -
சில்லறை பிச்சைக் கேட்டு
கடை கடையாய் பயணித்து
கண் மயங்கிச் சரிந்தபோது!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மக்கள் நலத்திட்டங்களை விரைந்து நிறைவேற்ற வேண்டும் -செ.ராபா்ட் புரூஸ் எம்.பி. வலியுறுத்தல்

பெரியசேமூா் நெசவாளா் குடியிருப்புவாசிகளுக்கு பட்டா வழங்கக் கோரிக்கை

திமுகவை வீழ்த்தக்கூடிய சக்தி தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குத்தான் உள்ளது - வானதி சீனிவாசன்

சாலையோரம் படுத்திருந்த சிறுத்தை: வாகன ஓட்டிகள் அச்சம்

போடி நகராட்சி குப்பைக் கிடங்கில் தீ - பொதுமக்கள் அவதி

SCROLL FOR NEXT