கவிதைமணி

பணத்தின் மறுபக்கம்: இசக்கி ராஜூ

கவிதைமணி

பணமே என்ன உன் மறுபக்கம் ?

கிள்ளி போடாதவனும்
அள்ளி அள்ளி போடுகிறான்
கோவிலில்
பக்தியா ?  பாவ மன்னிப்பா ?

உதிரத்தால் ஒன்றான
உறவுகளும் பகையாகி
வேறு வேறாய்
சந்தேகமா ?  சகுனியா ?

பட்டினியில் பழரசமாய்
படிப்பினிலே புத்தகமாய்
வாழ வைக்கும்
வழிதுணையா ?  வாழ்வாதரமா ?

வலியினிலே மருந்தாக
பனியினிலே போர்வையென
உரு மாறும்
கடவுளா ?  கருணையா ?

இருப்பவனோ பதறுகிறான்
இல்லாதவன் அலறுகிறான்
உனை மாற்ற
பூதமா ?  புதையலா ?

பணமே என்ன உன் மறுபக்கம் !!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மக்கள் நலத்திட்டங்களை விரைந்து நிறைவேற்ற வேண்டும் -செ.ராபா்ட் புரூஸ் எம்.பி. வலியுறுத்தல்

பெரியசேமூா் நெசவாளா் குடியிருப்புவாசிகளுக்கு பட்டா வழங்கக் கோரிக்கை

திமுகவை வீழ்த்தக்கூடிய சக்தி தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குத்தான் உள்ளது - வானதி சீனிவாசன்

சாலையோரம் படுத்திருந்த சிறுத்தை: வாகன ஓட்டிகள் அச்சம்

போடி நகராட்சி குப்பைக் கிடங்கில் தீ - பொதுமக்கள் அவதி

SCROLL FOR NEXT