கவிதைமணி

வேலி தாண்டிய காற்று:  வ. இசக்கி ராஜு

கவிதைமணி

நெல் மணிகள் தலை சாய
மல்லிகையின் மனமோடு
தென்றலென தவழ்ந்தவளே

ஊளையிட்டு ஆர்ப்பரித்து
தலைவிரி கோலமாய்
தாண்டவம் ஆடியதேன் ?

நினைவலையின் வேகத்தை
கருவிகளின் துணை கொண்டு
கணக்கிட துடிக்கும்
மனிதனுக்கு

எதனை புரிய வைக்க
இத்தனை
ஆர்ப்பாட்டம்

கவசமான ஓசோனை
காக்க மறந்து சென்றதையா ?
வேர் விட்ட மரத்தையெல்லாம்
வெட்டிச் சாய்த்து புதைத்ததையா ?

நிலம் காற்று பூமியினை
நேசிக்க மறந்ததையா ?
பனி உருகும் நிலை வந்தும்
பணிய மறந்து நடப்பதையா ?

தான் மட்டும் வாழ
நினைக்கும் தனி
மனித நடத்தையையா ?

எதனை புரிய வைக்க
இத்தனை ஆர்ப்பாட்டம் ..  இல்லை
செயற்கையினை கொண்டாடும்
மனிதனுக்கு
இயற்கையே பெரிதென

காட்ட
செய்திட்ட ஆணவமா ?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜாா்க்கண்ட் விமான விபத்து: சிகிச்சைக்காக ரூ. 8 லட்சம் கடன்; ஆனால், உயிரிழப்பு..

தமிழகம் காக்க போராடிய தலைவர்! ஜெயலலிதாவுக்கு இபிஎஸ் புகழஞ்சலி!

நத்தம் மாரியம்மன் கோயில் மாசிப் பெருந் திருவிழா: 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விரதம்!

வெள்ளி கிலோவுக்கு ரூ. 10,000 குறைவு! தங்கம் விலை உயர்வு!

ஏஐ உச்சி மாநாட்டில் சட்டையைக் கழற்றி போராட்ட விவகாரம்: இளைஞர் காங்கிரஸ் தலைவர் கைது

SCROLL FOR NEXT