கூட்டிற்குள் காற்றிருந்தால் உயிரி ருக்கும் கூடுவிட்டு வெளிவந்தால் உடலி றக்கும்காட்டிற்குள் மரமிருந்தால் வளமி ருக்கும் காட்டைவிட்டு வெளிவந்தால் மழையி றக்கும்வீட்டடுப்புள் நெருப்பிருந்தால் உலைகொ திக்கும் வீட்டைவிட்டு வெளிவந்தால் தெருகொ திக்கும்வேட்டுவைக்கும் வன்முறைபோல் காற்று மிங்கே வேலிதாண்டி வெளிவந்தால் ஊர ழிக்கும் !கன்னலெனும் மலர்தேனில் கலந்தெ ழுந்து காவினிலே தவழ்ந்துமெல்ல வெளியே வந்துதென்றலென வீசினாலோ உடல்சி லிர்க்கும் தேன்சுவைத்த நாவைப்போல் மனசு வைக்கும்மென்மையான கண்ணகியும் கணவ னுக்காய் மேன்மையான மதுரையினை எரித்த போலவன்மையாக மாறிகாற்று வேலி தாண்டி வந்தாலோ ஊரெல்லாம் பாழாய்ப் போகும் !காற்றழுத்த மண்டலந்தான் கைகள் வீசிக் கடல்வேலி தாண்டிஊருள் கால்கள் வைத்தால்நாற்றுகளைப் பிடுங்கள்போல் மரங்கள் சாயும் நட்டுவைத்த மின்சாரக் கம்பம் வீழும்கூற்றுவனாய் உயிர்பறிக்கும் இருளில் ஆழ்த்தும் குடிக்கப்பால் உணவின்றி வாட வைக்கும்ஆற்றொண்ணா அழிவுகளை அள்ளி வீசும் அவலக்குரல் எங்கெங்கும் கேட்க வைக்கும் !
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.