கவிதைமணி

வேலியைத் தாண்டிய காற்று: அழகூர். அருண். ஞானசேகரன்

கவிதைமணி
ஆற்றுக்குத்  தடையிடலாம்  அணைதனைக்கட்டி        அதிலேநீர  தனைதேக்கிப்  பயன்பெறலாம் !ஊற்றுக்கும்  உதவிடுமாம் , பயிர்விளைத்து        உற்றபசி  தனைதீர்க்க  உதவிடுமே !காற்றுக்கு  வேலியிடத்  தான்தகுமோ ?        கபோதிகள்  என்றவர்கள்  ஆகாரோ ?போற்றிடவும்  தக்கதுவோ  அச்செயலும்,        புல்லரெனக்  கண்டிட்டும்  நகைக்காரோ?காற்றினை  வேலியும்  தடுத்திடுமோ ? --- பெருங்        கடலதன்  அலைகளுவும்  ஓய்ந்திடுமோ ?போற்றிடத்  தக்கதோ  தடுப்பதுவும் ? --- தடுக்கப்        புறப்படு  வோரெலாம்  வீணரன்றோ ?ஆற்றல்  மிக்கதாம்  இவையிரண்டும் ---அதை        அறிந்திட்டு  தக்கநல்  வழிதனிலேசீற்றத்தில்  இருந்துமின்  சக்திபெற --- நாம்        சிந்தித்து  வழிமுறை  காண்போமே !வேலியைத்  தாண்டிட்டும்  தன்னிச்சை  யாகவே              வீசிடும்  பூங்காற்றும்,       விளக்கம்  இல்லாரே  அதுதன்னைத்  தடுத்திட              வேலியைக்  கட்டுவராம் !மாளிகை  என்றிட்டும்  ஏழைகள்  வாழ்கின்ற              மண்ணின்  குடிசையென்றும்,       மாற்றத்தைத்  தென்றல்  பார்ப்பதில்லை  அதனின்              மாட்சிக்கு  இணையுமில்லை !ஏனிந்தக்  கருணையை  மக்களின்  மனமதும்              இம்மியும்  கொள்வதில்லை ;       இளைத்தவர்  பெருத்தவர்  என்பதை  உணர்ந்தே              இவர்களின்  செயல்பாடும் !வானின்று  விழுகின்ற  மழைத்துளி  அனைத்தையும்              வாழ்விக்கக்  காண்கின்றோம் ;        வக்கிரம்  தனைக்கொண்ட  மனந்தனை  அதுகொள்ள              வாழுமோ  பிறவுயிர்கள் ?          

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜாா்க்கண்ட் விமான விபத்து: சிகிச்சைக்காக ரூ. 8 லட்சம் கடன்; ஆனால், உயிரிழப்பு..

தமிழகம் காக்க போராடிய தலைவர்! ஜெயலலிதாவுக்கு இபிஎஸ் புகழஞ்சலி!

நத்தம் மாரியம்மன் கோயில் மாசிப் பெருந் திருவிழா: 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விரதம்!

வெள்ளி கிலோவுக்கு ரூ. 10,000 குறைவு! தங்கம் விலை உயர்வு!

ஏஐ உச்சி மாநாட்டில் சட்டையைக் கழற்றி போராட்ட விவகாரம்: இளைஞர் காங்கிரஸ் தலைவர் கைது

SCROLL FOR NEXT