சுனாமி சுவடுகள் " ரீகன் • ஜெய்குமார்
Updated On : 25 ஜனவரி, 2024 at 12:30 AM
கடற்கரை மணலில்
சின்ன சின்ன
பாதச் சுவடு செதுக்கி
அலை துரத்த சிரித்து
ஓடி விளையாடினோம் அன்று ...
கோபம் கொண்டு
அலை துரத்த
சொந்தம் பந்தம் பலி கொடுத்து ஓடினோம்...
துள்ளி ஓடி மண்ணுக்குள்
ஒளிந்து கொண்ட
நண்டு தேடி பிடித்தோம்
அன்று...
Advertisement
சுனாமி துரத்தி அடித்த
மண்ணுக்குள்
போன பிணம் தோண்டினோம்....