கவிதைமணி

பட்டதாரி: ரீகன் • ஜெய்குமார்

கவிதைமணி

மானிட வாழ்வில் 
ஆயிரம் காயங்கள் 
ஆற்ற மருந்து மலை உச்சியில் 
கனவுகள் வெல்லும் ஒருநாள் 
என்னும் வாய் மொழி வாக்கியத்தை 
எதார்த்தம் சிதைத்து விட்டது 

கல்வெட்டி 
பால் சுமந்து 
நாளிதழ் சுமந்து     
துயில் துறந்து 
காய்ந்த மர மின்வெட்டில் 
கண்களின் இறகை தடவி 
வென்ற பட்டம் 
அலமாரி பெட்டியில் 
அர்த்தமின்றி உறங்குகின்றது   

சிறு வயது பொழுது-போக்கை 
என் பெற்றோர் பாரம் கண்டு  
என் உடல் நோவு தந்தும்  
வலி பொருத்து  
உழைப்பில் செலுத்தி 
விட்டேன்-பட்டம் வெல்ல 

வென்ற பட்டம் இன்றாவது  
பெற்ற வலியை இதமாக்கும் 
என்ற கனவு 
கசந்து விட்டது ஓராயிரம் 
போட்டியில்  

விடாமுயற்சியை என் நரம்பில் 
ஏற்றி வென்று வர பாதை 
போட்டேன், என்ன செய்வது 
என் போல் பல உள்ளம் 
வரிசை நிரம்பி போராடும் 
நியாயம், என் மனதை 
சுட்டுபோட்டது 

மக்கள் தொகை முன்னேற்றம் 
கண்ட பிழையா..?? 
அரசாங்கம் தெளிவில்லா 
பிழையா..?? 
என்ற அரை சிந்திப்பில் 
தேர்ந்த பட்டதோடு 
அடுத்த அலுவலகத்தை தட்டினேன் 
அய்யா நான் வேலை இல்லா 
ஏழை பட்டதாரி வந்திருகின்றேன் 
என்று..!!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைக் மீது காா் மோதல்: முதியவா் உயிரிழப்பு

ஏழுமலையான் தரிசனம்: 16 மணிநேரம் காத்திருப்பு!

அரபு நாடுகளின் பகுதிகள் மீது இஸ்ரேலுக்கு உரிமை?

நமோ பாரத் ரயில் பாதை திட்டம் தில்லியின் வளா்ச்சியை அதிகரிக்கும்: முதல்வா் ரேகா குப்தா

ஒடிஸா: 7-ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 5 ஆசிரியா்கள் கைது

SCROLL FOR NEXT