கவிதைமணி

வழிதவறியப் பயணங்கள் : அழகூர். அருண்.  ஞானசேகரன்.

கவிதைமணி
பயணமதில்  வழிதவறிப்  பாதைமாற  லாமா ?          பாதைமாறி  சென்றுவாழ்வில்  பழியேற்கத்  தகுமா  ?செயல்தனிலே  நேர்மைதனை  மறக்ககிட்டும்  பழியும் ,          சிந்தையிலே  தெளிவிழக்க  சிறப்பெல்லாம்  அழியும் !மயக்கமுறத்  தான்தகுமோ ,  மதிமயங்கிப்  போக          மாட்சியதும்  அழிந்தொழியும்  மற்றவர்கள்  சிரிக்க !அயர்ச்சிதனைக்  கூட்டுவிக்கும்  வழியென்றப்  போதும்          அறவழியிற்  செல்வதன்றோ  முறையென்றே  ஆகும் !வழிதவறியப்  பயணங்கள்  வாழ்க்கையிலே  வேண்டாம்           வக்கிரத்தைக்  கொண்டிட்டு்  வாழ்வதுவும்  மடமை !அழிவுதனை  விலைதந்தே  வாங்குவதுவும்  கொடுமை,           அவலமதைக்  கண்டுவிட  விழைவதுவோ  அருமை ?பழியன்றோ  பலனாகும்  என்றுணர்தல்  வேண்டும்           பண்பாடே  சிதைந்துவிட  பாரேநமைத்  தூற்றும்!விழிப்புணர்வு  தனைக்கொண்டு  விலக்குவதே  அருமை,           விவேகமுடன்  அதைக்காத்து  வெற்றிகாணப்  பெருமை!பயணம்  போகின்றக்  காலம்  மாறலாம்               பாதை  மாறலாமா?        பண்பு  தனைமறந்து  குறுக்கு  வழிசென்று               பழியை  ஏற்கலாமா ?நியதி  தனைமறந்து  வளமை  தனைக்காண               நெஞ்சம்  எண்ணலாமா?        நேர்மை  தனைமறந்து  மனதும்  கருமைகொளல்               நியாயம்  என்றாகுமா ?வியர்வை  தனைசிந்தி  செல்வம்  தனைசேர்த்தல்               விவேகம்  என்றாகுமாம்;        வெற்றி  தனைக்காணும்  வரையில்  தளராமை               வேண்டும்  தானல்லவோ ?முயற்சி  இல்லாமல்  வெற்றி  தனைவேண்டும்               மூடமை  அகலட்டும் !        முன்னேறும்  வழிநல்ல  நேர்வழி  என்றாக்கி                முயன்றுநீ  வெல்லவேண்டும் !வழியதுவும்  தவறுங்கால்  வாழ்க்கையதே  மாறிடலாம் ,அழிவதுவும்  நிச்சயமென்  றாகிடலாம் ! --- செழிப்படையநல்வழியே  சிறந்ததென  நயமுடனே  உணர்ந்துநாம்செல்வதுவே  வாழ்வின்  சிறப்பு !

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பார்த்துப் பேசு! விஜய்யின் குட்டிக் கதையை விமர்சித்த நடிகை ஜுலி!

தாய் கிழவி டிரைலர்!

மாட்டிக்கிட்டான் மைனரு குஞ்சு பாடல்!

மனுக்கள்அளிப்பு

நல்லகண்ணு உடல்நிலையில் பின்னடைவு

SCROLL FOR NEXT