செல்லாக் காசு: பொன்.இராம்
Updated On : 25 ஜனவரி, 2024 at 12:15 AM
ஆறுவயதில் தாத்தா
பையில் எடுத்த
செல்லாக்காசுகளின்
உண்டியல் பழைய இரும்புக்கடையின்
அடைக்கலம்!
அறுபது வயது தாத்தாவின்
உழைப்பு அனைத்தும்
சுரண்டிய தலைமுறைகள்
தண்டூன்றிய காலத்தில்
செல்லாக்காசாக்கிய
இளந் தலைமுறையின்
அறிவற்ற செய்கையினால்
முதியோர் இல்லங்களின்
உதயம் ஆரம்பம்!
பரிதியின் வெளிச்ச
ரேகைகள் அல்ல இவைகள்!
வரப்போகும் செல்லாக்காசு
இளந்தலைமுறை வரலாற்றின்
சோக முடிவின் முதல்
அத்தியாயம்!
Advertisement
இலஞ்சங்களின் வருகையால்
கருவூல மூட்டைகள்
நிரம்பிய வீடுகளில்
இன்று தூக்கம் தொலைந்து
நாள்கணக்கில் ஆகின்றன!
செல்லாக்காசு என
ஒதுக்கிய முதியோர்இல்ல
பெற்றோர் இன்று
வீட்டில் இருந்திருந்தால்
மூட்டைப் பணங்கள்
செல்லாக்காசாக மாறாது
இருந்திருக்கும்!