செல்லாக் காசு! -ரெத்தின.ஆத்மநாதன்
பணக்காரன் வீட்டுப் பிள்ளையாய்
பஞ்சு மெத்தையில் பிறந்திருந்தாலும்
பாரினில் கடமை யாற்றும்
பக்குவம் நீ பெறாவிட்டால்
ஊராரும் உற்றாரும் உறவினரும்
உனக்கிடும் பெயர் "செல்லாக்காசு!"
பட்டங்கள் பல பெற்றாலும்
பவித்திரமாய் வாழக் கற்றாலும்
வேதங்கள் தனை யுணர்ந்து
வேதியராய் வாழ்ந்த போதும்
பணம் பண்ணத் தெரியாவிட்டால்
பார் உனக்கு வழங்கும் பெயர் "செல்லாக் காசு!"
ஓடக்காரனிடம் உலகறிந்த அம்முனிவர்
வேதம் பாரதம் விஷயமுள்ள பல நூல்கள்
கற்றும் கேட்டும் அறியாத உன் வாழ்க்கை
"செல்லாக் காசென்றே" சில்மிஷம் செய்திட
ஓட்டை வழியே உள் வந்த நீர் கண்டு
நீச்சல் அறியா "உம்வாழ்வும் செல்லாக்காசே"என்றான்!
Advertisement
பரணில் பெட்டியில் பாதாள அறைதனில்
வங்கி லாக்கரில் வரவேற்பறை அலமாரியில்
பர்சில் பாக்கெட்டில் பாத்திரங்கள் சிலவற்றில்
தாத்தா அத்தை பாட்டி வீடுகளில்
ஒளித்து வைத்திருந்த ஐநாறு ஆயிரம் அத்தனையும்
ஒன்பதாம் தேதி காலை முதல் "செல்லாக் காசே!"