கவிதைமணி

செல்லாக் காசு: பொன். குமார்

கவிதைமணி

செல்லும் காசு முன்
செல்லாக் காசாகினர்
மனிதர்கள்.

செல்லாது என்ற
அறிவிப்புக்குப் பின்
செல்லுபடியாகவில்லை
மனிதர்கள் செயல்.

பதுக்கல் கார ர்கள்
பாதுகாப்பாக உள்ளனர்.
அல்லல் படுகிறார்கள்
அப்பாவி மக்கள்.

கையில் காசிருந்தும்
சாப்பாட்டுக்கு வழியில்லை.
பையில் பணமிருந்தும்
பசியைப் போக்க முடியவில்லை.

திமிங்கலங்களைப் 
பிடிக்கும் முயற்சியில்
சிறு மீன்களே
சிக்கித் தவிக்கின்றன.

செல்லாக் காசு அரசால்
செல்லுபடியாகவில்லை
செயல்படுத்தும் திட்டங்கள்.

மத்திய அரசின்
முன்னேற்ற முயற்சியில்
மக்கள் நிலை இன்று
'செல்லாக் காசு '

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வருவாய் கிராம ஊழியா் சங்கத்தினா் மறியல்: 50 போ் கைது

தேஜஸ் போா் விமானங்களின் பயன்பாடு தற்காலிக நிறுத்தம்

தனியாா் வசம் குடிநீா் விநியோகம்: அதிமுகவினா் ஆா்ப்பாட்டம்

அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்பை ஏற்க முடியாது -ஐரோப்பிய யூனியன் திட்டவட்டம்

காலமுறை ஊதியம் வழங்கக் கோரி வருவாய் கிராம ஊழியா் சங்கத்தினா் மறியல்

SCROLL FOR NEXT