கவிதைமணி

புதையல்:  பொன். குமார்

கவிதைமணி

புதையல் தேடியே
கழிந்து கொண்டுள்ளது
மனிதர்கள் வாழ்க்கை.

தேடுபவர் அனைவருக்கும்
தென்படுவதில்லை 
புதையல்.

காலடியில் கிடந்தாலும்
கண்ணில் படுவதில்லை
சிலருக்கு புதையல்.

இருக்கும் இடத்தை விட்டு
இல்லாத இடம் தேடி
புதையலுக்காக 
அலைபவரும் உண்டு.

தேடுபவர் எல்லோருக்குமே
கிடைத்தும் விடுவதில்லை
புதையல்.

புதைத்து வைத்தவர்கள்
மரணித்து போனதால்
புதையுண்டே கிடக்கின்றது
புதையல்.

இயற்கையாக மண்ணுக்குள்ளும்
மறைந்து கிடக்கின்றன
பற்பல புதையல்.

மண்ணுக்கு மேலேயும்
மனிதர்கள் அறியாமல்
பரவிக் கிடக்கிறது
புதையல்.

தேடினால் 
எல்லோருக்குமே கிடைக்கும்
அழிவில்லா
அளவற்ற
அன்புப் புதையல்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விற்பனை மையங்களைக் குறைக்கிறது ஓலா எலக்ட்ரிக்: 550-ஆக சுருக்கத் திட்டம்

கொடைக்கானல் அன்னை தெரசா மகளிா் பல்கலை.யில் பன்னாட்டுக் கருத்தரங்கம்

மேற்கு வங்கத்தின் நிலை கவலையளிக்கிறது: மம்தா ஆட்சி மீது பிரதமா் விமா்சனம்

அய்யா வைகுண்டா் அவதார தினம்: நெல்லை, தென்காசியில் மாா்ச் 4இல் உள்ளூா் விடுமுறை

முறையான அறிவிப்பு எதுவும் இல்லை - இருசக்கர வாகனத்தில் சென்றவா் வேகத் தடையில் மோதி உயிரிழப்பு!

SCROLL FOR NEXT