புதையலைத் தேடியிங்கு பொழுதெலாம் அலையும் கூட்டம்புதல்வரையே கூட புதையலுக்காய் கழுத்தறுக்கும்-ஈனத்தைஎங்கு சொல்ல! எப்படித்தான் இவர் மனத்தில் கோரமாய்இவ்வெண்ணங்கள் கொழுந்து விட்டெறிகின்றனவோ?!உழைத்தலே வாழ்விலென்றும் உயர்ந்திடும் உபாயமென்று கலைத்தொழில் பல கற்றோரிங்கு கழன்றனர்!-அவர் அனுபவமேஉண்மையில் நமக்கு வாழ்வின் உரைகல்லாய் நின்றிலங்கும் உறுதியாய்ப் பற்றிக் கொண்டால் உயர்வென்றும் நிச்சயமே!புதையலால் வாழ்வு மட்டுமல்ல! வரலாறும் வளமை காணும்!முன்னோரின் வாழ்க்கை ஏற்றம் முழுதாய் அதில் துலங்கும்!-பின்னாளில்வாழும் நம்மின் மாற்றங்கள் நலதா?தீதா?என்றேயுணர்ந்திட இதுவொன்றே நல் உபாயம்!தானாக க் கிடைத்தாலே அது புதையல்! அது விடுத்துநாமாக அடைய எண்ணி நயவஞ்சகங்கள் செய்து-போராடிஉயிரை மாய்க்கும் பொருந்தாதனவற்றைச் செய்தால்பேடி என்ற பெயரொன்றே பேருலகில் நிலைத்து நிற்கும்!மனித வாழ்வே புதையலென்று மகிழ்வுடனே ஏற்றிட்டால்பூவுலகே புனிதமாகும்!புகழுடைய பெரியோரெல்லாம்-கை குலுக்கி உன்னையிங்கு களிப்படையச் செய்திடுவார்!என்றைக்கும் மகிழ்ந்து நீஇருந்திடலாம் பெருமைமிகு சிறப்புடனே!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.