கவிதைமணி

புதையல்: கு. முருகேசன்

கவிதைமணி
தரையைத் தோண்டி தங்கம் எடுப்பது மட்டுமா புதையல்?தரையைத் தோண்டி தண்ணீர் எடுப்பதும் புதையல்.தங்கம் இல்லாமல் உயிர்கள் வாழலாம்தண்ணீர் இல்லாமல் உயிர்கள் வாழுமா?மண்ணைத் தோண்டுதல் வன்முறை – எனவேமண்ணில் இருந்து எடுப்பதல்லமண்ணே கொடுப்பதுதான் புதையல்மண்,சிலருக்குத் தண்ணீரைக் கொடுக்கிறதுசிலருக்கு கிரானைட்டைக் கொடுக்கிறதுசிலருக்குப் பெட்ரோலியத்தைக் கொடுக்கிறதுசிலருக்கு நிலக்கரியைக் கொடுக்கிறதுமனிதா நீ ஏன் அவற்றை மற்றவர்க்குகொடுக்க மறுக்கிறாய்?கொடுப்பதுதான் புதையல் என்றால்புத்தகம் கொடுப்பது சிந்தனைப் புதையல்புதிய கண்டுபிடிப்புகள் கொடுப்பது அறிவியல் புதையல்பீத்தோவான் கொடுத்தது இசைப் புதையல்பீர்பால் கொடுத்தது அறிவுப் புதையல்பிடல்காஸ்ட்ரோ கொடுத்தது புரட்சிப் புதையல்வள்ளுவன் கொடுத்தது வாழ்வியல் புதையல்மனிதா!  நீ எதைக் கொடுத்துப் புதையலாகப் போகிறாய்?மண் தங்கம் கொடுப்பதே புதையல் என்றால்மனிதா நீ அங்கம் கொடுத்தால்?மரணத்திற்குப் பின்னும் புதையல் ஆகலாம்மற்றவர் வாழ்வில்,அங்கம் கொடுத்த மனிதனை மண்ணில் புதைப்பதாலேதங்கமாக மாற்றித் தன் புதையலாக்கிக் கொள்கிறது  மண்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வருவாய் கிராம ஊழியா் சங்கத்தினா் மறியல்: 50 போ் கைது

தேஜஸ் போா் விமானங்களின் பயன்பாடு தற்காலிக நிறுத்தம்

தனியாா் வசம் குடிநீா் விநியோகம்: அதிமுகவினா் ஆா்ப்பாட்டம்

அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்பை ஏற்க முடியாது -ஐரோப்பிய யூனியன் திட்டவட்டம்

காலமுறை ஊதியம் வழங்கக் கோரி வருவாய் கிராம ஊழியா் சங்கத்தினா் மறியல்

SCROLL FOR NEXT