நீதி இல்லை நேர்மை இல்லைநாதி யாரும் நம்மில் இல்லைவாதி மாய்ந்துப் போமுன்சோதி தீர்ப்பைச் சொல்லில் காணேஅண்ணன் தம்பி வழக்குண்டு அன்றும் இன்றும் தொடர்ந்துண்டுமண்ணு வயற்கும் சண்டையுண்டு மனைவி மக்கள் பிரிவுண்டுஎண்ணில் வழக்கு நிலுவையுண்டு எப்போ முடிவுத் தெரியுமென்றுகண்ணில் கவலைத் தெரிவதுண்டு கவலைக்(கு) எப்போ தீர்வுண்டுதண்ணீர் வழக்கும் வருவதுண்டு தீர்ப்பை அரசு ஏற்பதன்றுகண்ணீர்ச் சிந்தும் விவசாயி கவலைப் பட்டு மடிவதுண்டுவிண்நீர்ப் பொழிவை அணைக்கட்டி விரைந்து சேர்க்க வழியுமுண்டு எண்ணம் நீதியைத் தேடிடுது இயற்கை வரத்தை நாடிடுது
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.