கவிதைமணி

மனமென்னும் மாயப்பேய்: கே. அசோகன்

கவிதைமணி
மனமெனும் கூட்டிலே  மாளாதஆசைகள்மனிதர்கள் வைத்தார்கள் கூட்டியே!குணமெனும் வைரத்தை குப்பையில்கொட்டிட்டே தேடிடுவார்  நாட்டிலே!தினந்தினம்  அல்லலில் அலை பாய்ந்துதேடிடுவார்  பணமெனும் நோட்டையே!கனப்பொழுது கண்மூடி இருந்தாலும்கவலைகள்தீருமே உங்கள் வீட்டிலே!காந்தியெனும் மனிதனின் மனத்தினிலேகீதையெனும் தத்துவத்தை சேர்த்திட்டார்!சாந்தியென்று பகன்றேதான் நல்லதொருசரித்திரத்தில் புத்தனுமே சேர்ந்திட்டார்!ஏந்துகின்ற கரங்களுக்கு எடுத்தெடுத்தேஇரைத்திட்ட கர்ணனோ வள்ளலானான்பாந்தமுடன் பக்குவமாய் பாடிச் சென்றபாரதியும் பைந்தமிழில் துள்ளலானான்!அன்னை தெராசாவின் தொண்டதனில்அன்புமகனாய்  ஏசுவே இருக்கின்றார்!பண்போடு பாசத்தை கலந்தே தந்தபார்போற்றும் கலாமோ சிறக்கின்றார்!கண்போற்றும் கலைநயமாய் கோபுரத்தைகட்டிவைத்த சோழனவன் ஆயக்கலையே1விண்போற்றும் இவரெல்லாம் என் செய்தார்?விரட்டினரே மனமென்னும் மாயப்பேயை !

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மெக்சிகோவில் போதைப் பொருள் கடத்தல் மன்னன் என்கவுன்டர்! ஆதரவாளர்கள் வன்முறை!

தேர்தலுக்குப் பின்பே ஜன நாயகன்?

பொன்னமராவதி அருகே ஜல்லிக்கட்டுப் போட்டி

கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்வி

தவெக ஆட்சி அமைந்தால்.... விஜய்யின் வாக்குறுதிகள்!

SCROLL FOR NEXT