முகப்பு
கவிதைமணி

ஜன்னல் நிலா: கா. மகேந்திரபிரபு 

Updated On : 24 அக்டோபர், 2016 at 4:50 PM
பகிர்:
Updated On : 25 ஜனவரி, 2024 at 12:03 AM

இரவின் மடியில் வானத்தின் சொந்தமாய் 
இனிமை சேர்க்கும் சாளரத்து நிலா 
நிலவின் ஒளி இரவுகளுக்கு உறவாய்  
நினைவுகளின் சொந்தமாய் நிலவு 

இயற்கை தந்த சொந்தம் நிலவு 
இனிமை கண்ட ஜன்னல் நிலவு 
வான ஓடையில் வான பூக்களாய் 
வண்ணமில்லாமல் மின்னும் நட்சத்திரங்கள் 

எங்கும் இனிமை கொள்ளும் இரவுகள் 
எதிலும் இன்பம் காணும் நினைவுகள் 
வெண்ணிறத்தின் அடையாளம் நிலவு 
வெண்மை எங்கும் பரவ ஜன்னல் நிலவு 

Advertisement

இரவின் ஓசை நிலவின் முகத்தில் 
இனிமை எங்கும் பரவ ஜன்னல் நிலா 
பார்த்தால் கிடைக்கும் பரவசம் 
பார்க்க பறக்க அமைதி கொள்ள ஜன்னல் நிலா 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.