ஜன்னல் நிலா: கே. அசோகன்
Updated On : 25 ஜனவரி, 2024 at 12:03 AM
பண்ணிசை பைந்தமிழ் கவிஞர்கள் தாம்பால்நிலவை பாடாதவர் எவருமுண் டோ?விண்ணிலே மின்னுகின்ற நிலவின் ஒளியில்வனிதையர்கள் ஏக்கத்திலே மூச்சு விட்டேஜன்னலிலே கன்னம்வைத்தே காத்தி ருக்கஜன்னலதில் எட்டியே பார்த்திடு வாய்!விண்ணிலே உயரமாய் இருந்த போழ்தும்வனிதையரை ஏன்தானோ வாட்டு கின்றாய்! இதழ்விரித்து மணம்வீசும் மலர்க ளெலாம்இனியநிலா வரும்போது சுகமாய் தோன்றும்புதுமலரின் வாசத்திலே மயங்கி தானேபொன்வண்டும் சுற்றித்தான் ரீங்கார மிடும்!நதிவெள்ள நீரினிலே முகத்தை காட்டிநங்கையின் அழகைத்தான் மிஞ்சிடு வாய்!கதிரவனின் ஒளியைத்தான் வாங்கி னாலும்கண்குளிரும் ஒளியைத்தான் பொழிந்திடு வாய்!மதியைத்தான் மயக்கிடுவாய் ஒளியின் கீற்றால்மதியென்று உன்னைத்தான் உரைக்கின் றார்விதியென்றே தன்னையே நொந்த வாறுவிரகத்தில் துடிக்கின்ற முதிர்கன்னி வீட்டில்சதிசெய்து நாளும்தான் ஜன்னல் வந்தேசதிராடி சிரிப்பதுதான் உன்றன் போக்கோ ?மதிமயக்கும் ஜன்னல்நிலாவே நீயும் தான்மங்கையென்றே கவிஞர்கள் புகழ்கின் றாரே!வெட்டவெளி வானந்தன்னில் வட்ட மாய்வலம்வந்தே ஒளியைத்தான் பொழிகின் றாய்!கட்டிளமை கரைந்தேதான் போகுதன் றோ!கடிமணம் புரியத்தான் வரனைத் தேடு !பொட்டாக உன்னையே நெற்றியி லிட்டேபொழுதெலாம் நின்னையே கொஞ்சிடு வேன்! தட்டாமாலையாய் உன்னையே சுற்றி வந்தால்திங்களதில் ஒர்நாளில் எங்குதான் போனாய்!